இதோ இன்னும் நான்கு உயிர்கள். கண்டனங்கள். வழக்கமான பொய்பூச்சு வாக்குறுதிகள் …….. அறிக்கைகள்……….கடிதங்கள்….. தந்திகள்…. எதையும் கானும். அதான் தேர்தல்தான் முடிஞ்சு போச்சே. இந்த பரதேசிங்கள பத்தி யாருக்கு கவலை? அய்யாவுக்கு தேர்தல் கமிஷன் சாக்கு. அம்மாவுக்கு எந்த சாக்கும் தேவையில்லை. யாருக்கும் பதில் சொல்லவேண்டிய கட்டாயமும் இல்லை. யாரையும் கேள்வி கேட்க தமிழனுக்கு நாதியும் இல்லை. மீண்டும் அதே உச்…….அதே மறதிகள். இவையெல்லாம் அந்த ஐநூத்தி சொச்சம் குடும்பங்களை தவிர்த்த ஆறு கோடி தமிழர்களுக்கு பழகிப்போனவை. ஆனால் அந்த குடும்பங்களுக்கு? அவர்களின் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்த குடும்பங்களின் வாழ்க்கை என்ன ஆகும்? நமது வீட்டில் நமது தம்பிக்கோ அண்ணனுக்கோ மாமனுக்கோ மச்சானுக்கோ நடந்துவிட்டால் நாம் இப்படியா இருப்போம். மற்றவர்கள் இப்படி இருந்தால்தான் நாம் தாங்கிக்கொள்வோமா?
அப்படி என்ன தவறு இழைத்தார்கள் இவர்கள்? தமிழனாக இந்தியாவில் பிறந்தது ஒன்றுதான் பெருந்தவறாகப்படுகிறது. மயிரு போனதற்கே உசிரு போனமாதிரி துடித்தவர்கள் ஒன்றா இரண்டா ஐநூத்தி சொச்சம் உசிரு போனபிறகும் மசிரே போச்சுன்னு இருப்பதை என்னவென்று சொல்வது? ஆசையினால் தாண்டி போகிறார்கள் என்று அய்யாவே சொல்லிட்டார். எந்த ஆசையினால்? சிங்களவன் கையால உயிர் போகனும் என்ற ஆசையினாலா? எவனாவது தற்கொலை பண்ணிக்க விரும்பி மீன் பிடிக்க போவானா ஐயா? எல்லாம் அந்த அய்யாவுக்கே வெளிச்சம்!
ஒரு அமெரிக்கனோ பிரச்சுகாரனோ பாதிக்கப்பட்டா அவன் தனது நாட்டை சேர்ந்தவனான்னு பார்க்கறதுதான் அந்த நாட்டு அரசுகளுக்கு வழக்கம். ஆனால் ஒரு இந்தியன் பாதிக்கப்பட்டா அவன் மலையாளியா இந்திக்காரனா அப்படின்னு பார்க்கற வழக்கம் இந்திய அரசுக்கு மட்டும்தான் இருக்குது. பாதிக்கப்பட்டவன் மலையாளியாவோ இந்திக்காரனாவோ இருந்தா அது அமரிக்காவா இருந்தாலும் ஆஸ்திரேலியாவா இருந்தாலும் பாய்ந்து போவார் வெளியுறவு அமைச்சர். சீக்கியனின் மசுர வெட்டினா உசிர குடுத்து கத்துவாறு பிரதமர். ஆனா தமிழனை வீடு தேடிவந்து அடிச்சாலும் கொன்னாலும் கேக்குறதுக்கு நாதியில்லை. அதுமட்டுமில்லை அடிச்சவனுக்கு விருந்தும் இரத்தின கம்பள வரவேற்பும் பூரணகும்ப மரியாதையும்! அடேங்கப்பா எப்பேர் பட்ட நாட்டுல பொறந்திருக்கோம்?
இந்தியனா அதுவும் ஒரு தமிழனா இந்தியாவுல பொறந்ததுக்கு வெட்கப்படுறேன்! வேதனைப்படுகிறேன்!
பட உதவி : வினவு.காம். நன்றி தோழர்களே!