Tuesday, 23 September 2008
மாட்டிறைச்சி சாப்பிட்டாலும் குண்டாக மாட்டீர்கள்!! (இந்தோனேசியா – ஒரு அறிமுகம் - பகுதி 3)
உணவு பழக்கங்கள்:
இந்தோனேசிய மக்கள் அசைவ உணவு வகைகளையே மக்கள் பெரிதும் உண்கிறார்கள். மேலும் அரிசி மற்றும் நூடுல்ஸ் வகைகளை அதிகம் உண்ணுகிறார்கள். பக்க உணவுகள் முதல் பிரதான உனவுகள் வரை அசைவம் இல்லாமல் ஒன்றுமே இல்லை. சைவம் மட்டும் உண்பவர்கள் பாடு திண்டாட்டம் தான். சாதாரண நொறுக்குத்தீனி வகையறாக் கூட அசைவம் கலக்காதது இல்லை. குறைந்தபட்சம் அசைவ வாசனையாவது கூட்டப்பட்டதாக இருக்கும். அதிலும் மாட்டிறைச்சியை மக்கள் விரும்பி உண்கிறார்க்ள். இங்கு மாட்டிறைச்சி ஆட்டிறைச்சியை விட விலை அதிகம். அதுவும் மாட்டிறைச்சியை ஆஸ்திரேலியாவிலிருந்து பெருமளவில் இறக்குமதி செய்கிறார்கள். இவ்வளவு அசைவ உணவு சாப்பிட்டும் அதுவும் மாட்டிறைச்சி சாப்பிட்டும் பெரும்பாலானவர்கள் அதுவும் பெண்கள் ஒல்லியாக அல்லது நல்ல வடிவான தேகம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். இங்கு வந்த புதுசில் இங்கு உள்ள மக்களை பார்த்து நான் மிகவும் வியைந்த விஷயம் இது. இதைப்பற்றி நம் மருத்துவர் ஒருவரிடமே கேட்டேன். அதற்கு அவர் இரு முக்கிய காரணங்களை பட்டியலிட்டார். ஒன்று அவர்களின் பாரம்பரிய ஜீன்கள். மற்றொன்று அவர்களின் நல்ல பாரம்பரிய உணவு பழக்கங்கள். உண்மைதான்! அவர்கள் நம்மை போன்று நூறு கிராம் இறைச்சிக்கு ஐநூறு கிராம் சோற்றை பாத்தி கட்டி உண்பதில்லை. இறைச்சியுடன் சிறிதளவே சோறு உன்கிறார்கள். மேலும் பச்சையாய் சில காய்கறிகளையும் சில நறுமன கீரை வகைகளையும் சேர்த்தே உண்கிறார்கள். உணவுக்கு முன்னும் பின்னும் பால் மற்றும் சீனி சேர்க்காத தேநீரை குடிக்கிறார்கள். மேலும் பசித்த பிறகே உண்ணும் பழக்கத்தையும் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் அவர்களால் இவ்வாறு உடலை பேன முடிகிறது.
ஆனால் இவர்களுக்கும் இப்போது பிரச்சினைகள் காத்திருக்கின்றன. எதனால்? இவ்வாறு ஒரு நாடு உருப்படுவதைக் கண்டால் அமெரிக்க நிறுவனங்களுக்கு பிடிக்குமா? அவர்களின் உலகமயமாக்கலை இங்கும் அவிழ்த்து விட்டு விட்டார்கள். மெக் டொனால்டு, கெண்டக்கி போன்ற அனைத்து அமரிக்க துரித உணவு நிருவனங்களும் இங்கு கடை விரித்து ஓகோ என்று கொடிகட்டி பறக்கவும் செய்கிறார்கள். பற்றா குறைக்கு பிட்சா ஹட் வேறு. விளைவை சொல்லவா வேண்டும்?? புதிய தலைமுறையினரிடம் ஒபேசிட்டி எனும் உடல் பருமன் பிரச்சினை பூதாகரமாக உருவெடுத்திருக்கிறது. நாடு எதுவாயினும் அவரவர்களின் பாரம்பரிய உணவும் பழக்க வழக்கங்களும்தான் சிறந்தவை என்று யாருமே அறிந்து கொள்வதில்லை. நாம் உட்பட !!
இறுதியாக இந்தோனேசியா சம்பந்த்தப்பட்ட சில கொசுறு தகவல்களோடு இத்தொடரை முடிக்கிறேன். உலகையே மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த இரும்பு ஜாம்பவான் லட்சுமி மிட்டல் தனது முதல் இரும்பு தொழிற்சாலையை தொடங்கியது இந்தோனெசியாவில்தான். அதேபோல் தற்போது அமரிக்காவை கலக்கி கொண்டிருக்கும் அதிபர் வேட்பாளர் பாரக் ஒபாமா சிறு வயதில் வளர்ந்தது இங்கேதானாம். அவரின் மிகப்பிடித்தமான உணவு இந்தோனெசியாவின் “நாசி கோரங்” என்னும் பிரைடு ரைஸ் தானாம். இதை பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்து இருந்தார்.
வாழ்க இந்தோனேசியா!!
பி.கு : இத்தொடரை நான் பல வழிகளில் தெரிந்து கொண்ட விவரங்களை கொண்டே எழுதியிருக்கிறேன். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும் சுட்டிக்காட்டவும் வேண்டுகிறேன்.
(முற்றும்)
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
I really like to read and know details about foreign country, its people, their culture, economy, customs, practices, beliefs, their view about India and Indians etc., from our Tamil Bloggers who are residing outside of India. Your's introduction about Indonesia is good and informative. You have the talent to narrate the things in an intersting way..I would suggest you to include more photos and fine details like what you encounter there in your day-to-day life (about transport, language, reception, entertainment, tamil settlements etc.,). All the best!
Looking forward to read more in your blog...
Cheers
Prakash
www.thenkarai.blogspot.com
Thanks for your encouraging words. I will try my level best in my upcoming articles.
" நல்ல வடிவான தேகம்"
நீங்கள் இலங்கைத் தமிழரா?? சந்தேகம் வரக் காரணம் ;இந்த வடிவு எனும் சொல்லைப் புழங்குவது
இலங்கைத் தமிழராகிய நாமே... நம் தமிழ்நாட்டுச் சகோதரர்கள் அழகு எனத் தான் குறிப்பிடுவார்கள்.
இவர்கள் சாதாரணமாக கோவில்களிலேயே இறைச்சி படைப்பார்கள்.
கட்டாயம் வீட்டுக்கு ஒரு சிறு கோவில் இருக்கும்; நாளாந்தம் சமைத்த உணவில் சிறிது படைத்து விட்டே
சாப்பிடுவார்கள்.
அழகான கைவினைப் பொருட்கள்; பற்ரிக் ஆடைகள் என வர்ணமயமாக இருக்கும்
தங்கள் ஆக்கம் சுவாரசியமாக இருந்தது.
சற்றுப் படங்களும் சேர்க்கவும்.
You can find a lot of material on Indonesia in Agathiyar Yahoo Group.
Will get back to you.
Here are some links to Indonesia.
Will come up with others.
http://www.visvacomplex.com/Vaali_Vadhai_Panel_from_Java.html
http://www.visvacomplex.com/Loro_Djongrang.html
http://www.visvacomplex.com/An%20Old%20Scholar%27s%20Search1.html
நான் வாழும் தேசத்திலிருந்து இன்னொரு பதிவர்.....மிகுந்த சந்தோசம் நண்பரே.....
மிக்க நன்றி திரு.மதிபாலா
வருகைக்கு நன்றி
தங்கள் தகவல்களுக்கு நன்றி திரு ஜெயபாரதி. எனக்காக மெனகெட்டமைக்காக மிக்க நன்றி.
நல்ல பதிவு.நாங்களும் இந்தோனேசியா வில் சில வருடங்கள் வசித்தோம்.எத்தனை அழகான நாடு,பாசமான மக்கள்.நீங்கள் சொல்வதை போலவே,எத்தனை வகையான இயற்கை வளங்கள் கொண்ட நாடு,ஆயினும் தேவைக்கு மட்டுமே உழைத்தால் போதும் என நினைக்கும் மக்கள்,லஞ்சம்,அரசியல் ஆகியன இந்நாட்டை வளர விடாமல் தடுக்கின்றன.இந்தோனேசியா வளமுடன் திகழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்
இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கிறேன்.
இவற்றையும் பார்த்துவையுங்கள் -
http://groups.yahoo.com/group/agathiyar/message/45432
http://groups.yahoo.com/group/agathiyar/message/45435
http://groups.yahoo.com/group/agathiyar/message/45440
http://groups.yahoo.com/group/agathiyar/message/45442
http://groups.yahoo.com/group/agathiyar/message/45451
http://groups.yahoo.com/group/agathiyar/message/45453
http://groups.yahoo.com/group/agathiyar/message/45455
http://groups.yahoo.com/group/agathiyar/message/45458
http://groups.yahoo.com/group/agathiyar/message/45460
வருகைக்கு நன்றி திரு/திருமதி பானு
யூஆரெல் சரியாகத் தெரியவில்லை.
ஆகவே அகத்தியர் யாஹ¥ குழுவுக்கே சென்று அங்கிருந்து
கீழ்க்கண்ட எண்கள் கொண்ட மடல்களைப் பார்த்துக்
கொள்ளுங்கள் -
http://groups.yahoo.com/group/agathiyar/
Message Nos. -
45432, 45435, 45440, 45442,
45451, 45453, 45455, 45458,
45460
நன்றி ஐயா மருத்துவர் பல்கலைச்செம்மல் திரு ஜேபி அவர்களே! தங்களைப்போன்ற அறிஞர்கள் இச்சிறியவனின் வளைத்தளத்திற்கு வருகைப் புர்ந்ததை என் பாக்கியமாக கருதுகிறேன்.
மீண்டும் நன்றி!!
இதற்கு முன் எழுதிய பகுதிகளுக்கும் சுட்டி இந்தப் பதிவில் போட்டு வைத்தால், அதையும் படிப்போமே...
ஃஃஃஃஃ
இந்தனோசியாவில் இந்துமதம் குறித்து எழுதும் எண்ணம் இருக்கா..??
நன்றி TBCD, பக்கத்தில் உள்ள மாதங்கள் மீது சுட்டினால் மற்றப்பதிவுகளை படிக்கலாம்.
இந்தோனேசியாவில் இந்துமதம் பற்றி சில ஆவனங்களை சேகரித்துக்கொண்டிருக்கிறேன். மிக விரைவில் நீங்கள் எதிர்பார்க்கலாம்.
Post a Comment