Wednesday, 22 October 2008
தமிழர்களே ஓங்கி முழங்குங்கள்!!
”தமிழன் இல்லாத நாடில்லை. ஆனால் தமிழனுக்கென்று ஒரு நாடில்லை” என்பது எத்தனை உண்மை என்பது கடல் கடந்த அத்தனை தமிழனும் உணர்வுப்பூர்வமாக அறிவான். சென்ற உலக கோப்பை கால்ப்ப்ந்து போட்டியின் போது அனைவரின் புருவங்களையும் உயரச் செய்த்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த நாடு செனகல் எனும் சின்னஞ்சிறிய தேசம். இத்தேசத்தில் கூட தமிழர்கள் அதிக அளவில் வாழ்வதாக செய்திகள் மூலம் அறிகிறோம். இப்படி உலமெங்கும் பட்டு பரவிக்கடக்கிறது தமிழினம். இப்படி உலமெங்கும் தமிழன் வாழ்ந்தாலும் தமிழனுக்கு அசைக்கமுடியாத முகவரியைத் தந்தது தமிழீழ்ம் தான். இன்றும் என்னுடன் பழகும் மேற்க்கத்தியர்கள் நான் தமிழன் என்று அறிந்ததும் என்னைப்பார்த்து கேட்கும் கேள்வி நீர் யாழ்ப்பானத்தை சேர்ந்தவரா என்பதுதான். அதற்கு என் தோற்றம் கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அவர்களை பொறுத்தவரை மறத்தமிழன் என்பவன் ஈழத்தை சேர்ந்தவனாகத்தான் இருப்பான் என்று நினைக்கிறார்கள். இதை அவர்களிட்ம் உரையாடும்போது நான் உணர்ந்திருக்கிறேன். இந்திய தமிழர்களை அவர்கள் தமிழர் என்று உணர மறுக்கிறார்கள். இப்போது தமிழகத்திலுள்ள நிலை கூட இதை வலுப்படுத்துவதாகத்தான் இருக்கிறது. தமிழகத்திலுள்ள தமிழர்கள் சோரம் போய்விட்டாரகள். தமிழன் ஆண்ட இலங்கை மண்ணில் இன்று தமிழரின் வாழ்வுரிமை மறுக்கப்படுகிறது. இதை தட்டிக்கேட்க ஒன்று சேரக்கூட நாதியற்ற இனமாக தமிழக தமிழினம் மாறிவிட்டது. அரசியல் என்ற போர்வையில் தமிழினத்தின் உணர்வுகளை கொச்சைப் படுத்துகிறது ஒரு ஆள்காட்டி கூட்டம்.
நேற்று கூட செய்திகளில் ஈழத்தில் ஒரு குண்டு வீச்சின் நேரடிக் காட்சிகளை ஒளி பரப்பினார்கள். ஒன்றுமறியா பிஞ்சுகள் வெடித்து சிதறுவதை பார்க்கும்போது நெஞ்சே வெடித்துவிடும் போல் உள்ளது. சிறார்களும் பெண்டுகளும் வயோதிகர்களும் இடும் கூக்குரல் நெஞ்சை பிசைகிறது. பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் பதுங்குகுழிகளை நோக்கி ஒடும் போதே சிதறுகிறார்களே! ஐயோ வயிறு எரிகிறது! இங்கோ தமிழகத்தில் இதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் அறிக்கைப்போர் புரிகிறார்கள். தமிழனின் பிணத்தின் மீது அரசியல் செய்கிறார்கள் வந்தேறிகள். தன் சொந்த பிறப்பின் இனமே தெரியாத இவர்களுக்கு தன் இனத்துக்காக சொந்த உயிரையே துச்சமாக என்னும் தமிழனின் உணர்வுகள் புரிந்திருக்க ஞாயம் இல்லை. ஆனால் இந்த வந்தேறிகளை வாழவைத்து இன்னும் இவர்களுக்கு சொம்பு தூக்கம் தமிழனை பெற்ற தாயும் ஏற்பாளோ? தமிழனின் ரத்தத்தின் மீது அரசியல் செய்து பணம் பார்க்கும் பிணந்திண்ணி கழுகுகளை யாரும் வந்து மாய்ப்பாரோ? தன் இனம் அழிவதைக்கூட அறியாத தமிழினமே நீர் தமிழ்த்தாய் வயிற்று பிள்ளைகளில்லையா? அய்யோ மனதைக்கொன்ற மானிடமே!
கண்டன குரல்களும், மனித சங்கிலியும் என்ன பலனை தரப்போகிறது என்று ஒரு கூட்டம் கேட்கிறது ஒரு கூட்டம். இந்திய இறையாண்மை என்று எதோ புதிய கண்டுபிடிப்பை சொல்லி புலுகுகிறது இன்னொரு கூட்டம். வெற்றுக் குரல் கொடுக்கக்கூட மனமில்லாத உணர்வில்லாத கூட்டம் குரல் கொடுப்பனைப்பார்த்துக் பதவியை இழக்கசொல்லி கேட்கிறது. இவர்களுக்கெல்லாம் அக்கரை தமிழன் படும் பாடு மீது அல்ல…..பதவி மீது. எரியும் வீட்டில் பிடுங்கினவரை லாபம் பார்க்க நினைக்கிறார்கள். கேவலம்!
தமிழர்களே! தமிழக தமிழர்களே! இத்தகைய புல்லுறுவிகளை புறந்தள்ளுங்கள்! ஒன்று பட்டு குரல் கொடுங்கள். ஓங்கி முழங்குங்கள். நமது உணர்வுகளை இந்திய அரசுக்கு புரிய வையுங்கள். உலகத்தின் பார்வை நம் மீது திரும்பட்டும். ராஜபக்சே அரசின் அத்துமீறல் உலகத்தின் கண்டனத்துக்கு வரட்டும். இது நம் ஈழத்து மக்களுக்கு ஆதராவாக அமையட்டும். அடக்கு முறைகளை எதிர்கொள்ள அவர்களுக்கு நம் குரல் ஆதரவாய் இருக்கட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நண்பரே,
என்னதான் பேசினாலும் உணர்வுள்ளவரே விழி திறப்பர். ஈழம் படும் வேதனையில் 'ஈழத்தமிழர்களுக்கு இதுவும் வேண்டும்'என்று பிரித்துப் பேசுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எனது பதிவில் எனக்கு சென்னையில் வீடு கிடைக்காததற்கு பின்னூட்டம் வழியாக மகிழ்ந்திருக்கிறார் ஒரு நண்பர். தமிழன் என்ற இனவுணர்வு எம்மையெல்லாம் இணைக்காதவரை உய்வில்லை. நன்றி.
congrass M.P.
YESTER DAY TOLD IN ASSEMBLT ARREST ALL TAMIL PEOPLE.
NO ALIANCE WITH ANBODY.
NO ONE VOTE FOR CONGRASS. TAHY SHOULD NOT ET SINGLE VTE FROM TAMIL NADU.
தமிழீழத்தை ஏற்றுக்கொள்கிற அரசயில் கட்சிகளை மட்டுமே தமிழ்நாட்டில் தமிழர்கள் ஆதரிக்க வேண்டும்.
ஈழச்சிக்கல் தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் மிக முக்கியமான பிரச்சனையாக இருக்கவேண்டும்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் போன்ற கட்சிகளையும் தமிழரல்லாத தலைவர்களையும் தமிழர்கள் புறக்கணிக்கவேண்டும்.
Post a Comment