எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Sunday, 15 March 2009

வேசிகள்!

இதோ தமிழீழ மக்களின் மறுமலர்ச்சிக்கான நம்பிக்கை கீற்று தென்பட்டு விட்டது. இதோ தமிழினத்தின் ஒப்பற்ற தலைவி தமிழனத்தை காப்பாற்ற கிளம்பிவிட்டார். இனி எம்மக்களின் வாழ்வில் சுபிட்சம் நிச்சயம் என்று விரைவில் வைகோ உணர்ச்சி மிக்க உரையாற்றக்கூடும். அதையும் கட்டம்கட்டி தினமலர் வெளியிடக்கூடும். காதில் பூ வைத்துக்கொண்டு தயாராக இருங்கள். உண்மையில் தமிழக மக்களைப்பற்றி இந்த அரசியல் கட்சிகள் என்ன நினைக்கின்றன என்பதை செயலலிதாவின் அண்மைய உண்ணாவிரதம் வெளிச்சம் போட்டுக் காட்டியது. நேற்றுவரை தமிழீழ மக்களை ஒரு புழுவைப்போல பார்த்த செயலலிதாவுக்கு இன்று அவர்கள் மீது திடீர் பாசம் வந்துவிட்டது. இலங்கையில் நடப்பது ஒரு போர் என்றும் போர் என்று வந்துவிட்டால பொதுமக்கள் உயிரிழப்பது தவிர்க்க முடியாதது என்று அறிக்கை விட்டவர் செயலலிதா. இன்று திடீரென்று அங்கு நடப்பது படுகொலை என்ற ஞானொதயம் அவருக்கு எப்படி வந்தது? இலங்கை பிரச்சினையில் இந்திய அரசால் எதுவும் செய்யமுடியாது என்று தெரிந்தும் கருணாநிதி நாடகம் ஆடுகிறார் என்றார் செயலலிதா. அப்படியென்றால் சென்னையில் எதற்கு இவர் உண்ணாவிரதம் இருந்தார். நேராக விமானம் பிடித்து இலங்கை சென்று உண்ணாவிரதம் இருக்கவேண்டியதுதானே? இவருடன் உண்ணாவிரத நாடகம் போட்ட தா.பாண்டியண் இதை விளக்கவேண்டும். செயலலிதாவுக்கு நடிக்க யாரும் சொல்லித்தரவேண்டியதில்லை. அதுவே அவரது தொழிலும் கூட. அதையே அவர் அரசியலிலும் செய்கிறார். ஆனால் அதையும் தலையில் வைத்துகொண்டாடும் தமிழக கோமாளிகளை என்னவென்று சொல்வது? இலங்கை பிரச்சினைக்கு அந்த நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தீர்வு காண வேண்டும் என்று செயலலிதா கூறுகிறார். ஆனால் அங்கு பிரச்சினையே அந்த நாட்டின் அரசியலைப்பு சட்டம்தான் என்பது அவருக்குத் தெரியாதா? அந்த அரசியலைப்பு சட்டத்தை மாற்றக்கோரித்தானே தமிழர்கள் பல ஆண்டுகளாக போராடினார்கள்? அதை மாற்ற முடியாததால் தானே தனி ஈழம் கேட்கிறார்கள்? அந்த அரசியலைப்பு சட்டத்தை கையில் வைத்துக்கொண்டுதானே ராச பக்சே அரசு தமிழர்களை கொன்று குவிக்கிறது? இப்படிப்பட்ட அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட தீர்வு என்று செயலலிதா சொல்வது எதை? மறைமுகமாக அவர் சொல்ல வருவது இதுதான். அதாவது சிங்களவர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டு இரண்டாம் தர குடிமக்களாக அந்த மண்ணின் மைந்தர்களான தமிழர்கள் வாழ ஒப்புகொள்ள வேண்டும். செயலலிதாவிடமிருந்து இத்தகைய யோசனை வருவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. சோ இந்துராம் சுசாமி மாலன் கிருட்டிணமூர்த்தி போன்றவர்கள் மார்பில் கிடப்பதை இறுக்கிகொண்டு சொல்வதும் இதைத்தான். செயலலிதாவுக்கும் இவர்களுக்குமான ஒற்றுமையை கணக்கிட்டாலே இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது நமக்கு தெள்ள தெளிவாக புரியும். கருணாநிதி நிதி திரட்டினால் அது ஏமாற்று வேலை என்று சொன்ன செயலலிதா இன்று தான் நிதி திரட்டுகிறார். காங்கிரசு உண்டியல் தூக்குவதை நம்பாதீர்கள் என்று கூக்குரலிட்ட வைகோ செயலலிதா தூக்கிய உண்டியலில் ஐந்து லட்சம் போட்டிருக்கிறார். என்ன ஒரு பேடித்தனம் பார்த்தீர்களா? கருணாநிதி திரட்டிய நிதி ஈழ மக்களுக்கு போய் சேராதென்றால் செயலலிதா மட்டும் என்ன விமானம் பிடித்து போய் ஈழத்தில் நிதியை அல்லது நிவாரணப் பொருட்களை கொட்டப்போகிறாரா? ஈழத்தமிழர் நிதிக்கு செயலலிதா தம் சொந்த நிதியிலிருந்து ஐந்து லட்சம் கொடுத்தாராம்? என்ன வள்ளல் குணம் பார்த்தீர்களா? ஆயிரம் கோடி ஐம்பதாயிரம் கோடி என்று தமிழன் பணத்தை வாரி சுருட்டியவர்கள் ஐந்து லட்சத்தை தூக்கிப்போட்டு தமிழின காப்பாளர்கள் ஆகிவிடுகிறார்கள். காங்கிரசு காரர்கள் தமிழீழ மக்களுக்க்காக பொது இடங்களில் உண்டி வைத்து நிவாரணப் பொருட்களை சோனியா ஆணையிட்டிருக்கிறாராம். சோனியா ஆணையிட்ட பிறகுதான் தமிழக காங்கிரசுக் காரர்களுக்கு தாங்கள் தாங்கள் தமிழர்கள் என்று உரைத்திருக்கிறது. இவர்கள் தமிழினர்வை என்னென்று சொல்வது. இப்படிப்பட்ட காங்கிரசுடன் கூட்டுச்சேர தமிழினப்போராளி இராமதாசு பழியாய் கிடக்கிறார். ஒரு தொகுதி அதிகம் கிடைத்தால் ஈழம் என்ன தமிழகத்தையும் ராசபக்சே எடுத்துக்கொண்டாலும் இவருக்கு கவலையில்லை. இவருக்கு வேண்டியதெல்லாம் தொகுதிதான். தமிழக அரசியல்வாதிகளின் கோமாளித்தனம் நமக்கு ஒன்றும் புதிதில்லை. ஆனால் இவர்களின் அரசியல் ஆதாயத்திற்காக தமிழீழ மக்களை இவர்கள் கோமாளிகளாக ஆக்குவதைத்தான் நம்மால் சகிக்க முடியவில்லை. இவர்களின் வேசித்தனத்தை மக்கள்தான் புரிந்துகொள்ளவேண்டும். ---------------------------------------------------------------------------- ---------------------------------------------------------------------------- உங்களுக்கு இந்தக் கட்டுரை பிடித்திருந்தால் உங்கள் வாக்குகளை கீழே உள்ள தமிழீழ் வாக்கு சேகரிப்பானில் பதிவு செய்யவும். இது மற்றவர்களுக்கும் இக்கட்டுரையை கொண்டு செல்ல உதவும்.