எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Tuesday, 27 October 2009

தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே! (ஒரு மீள் பதிவு)

கீழே உள்ள பதிவு பிப்ரவரி மாதத்தில் எழுதியது. ஆயிற்று 8 மாதங்கள். ஆனால் நம் சொந்தங்களின் நிலை மாறியதா? இன்றும் செத்துப்போன நம் சொந்தங்களின் புதைகுழியின் மேல் நின்று தமது கேவலமான அரசியலை நடத்திக்கொண்டிருகிறார்கள் நம் தமிழக கோமாளிகள். இரத்தக்காட்டேரிகளுக்கு இரத்தின கம்பள வரவேற்பு கொடுக்கிறார்கள். பஞ்சமா பாதகனுக்கு பட்டாடை போர்த்தி அழகு பார்க்கிறார்கள் கோமாளி குஞ்சுகள். தமிழனின் இத்தகைய கேவலமான் இந்நிலைக்கு யார் காரணம். இந்நிலை என்று மாறும்?????
000000000000000000000000000000000000000000000000000000000000
அன்புத்தமிழ் நெஞ்சங்களே! நம்முடைய சொந்த தொப்புள் கொடி உறவுகள் ஒரு சில மைல் தூரத்தில் தினம் தினம் செத்துமடிந்து கொண்டிருக்கிறார்கள். நமது சொந்த இனம் பூண்டோடு சிரீலங்கா அரசால் திட்டமிட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் நாமோ அந்த நாட்டுக்கு இறையாண்மையுள்ள நாடு என்ற பட்டத்தை அனுதினம் வழங்கி பெருமை படுத்திக்கொண்டிருக்கிறோம். நம்மில் பலர் அங்கு நடப்பது ஒரு திட்டமிட்ட இனஅழிப்பு என்பதை அறியாமல் சிரீலங்கா அரசுக்கு வால் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். நாம் அரசியல் செய்ய பல களங்கள் இருந்தும் கொஞ்சம் கூட பிரஞ்ஞையே இல்லாமல் தினம் செத்து மடிந்துகொண்டிருக்கிற நமது சொந்தங்களின் பிரேதங்களின் மீது அரசியல் செய்துகொண்டிருக்கிறோம். இன்னும் சிலர் அவர்களுக்கு ஆதரவு தருவதே இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்பதுபோல் ஒருமாயயை உருவாக்குகிறார்கள். இதோ நம் ஈழ சகோதரனின் கூக்குரலை இந்த பாட்டில் கேளுங்கள். தான் வாழ்வை இழந்து நின்றபோதும் தான் வளர்த்த குருவியின் நாயின் மீது அவர்களுக்கு இருக்கும் வாஞ்சை கூட இந்த சகோதர சகோதரிகளின் மேல் நமக்கு இல்லையே! ஐயகோ பேய் மனது படைத்தோரே நீர் மனதிறங்க மாட்டீரோ! தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே! தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே! வெடிவிழுந்து எரிந்த பனை கரை உடைந்து காயந்த குடம் கூரை சரிந்த எமது இல்லம் குருதி வடிந்த சிறு முற்றம் இரவை கிழித்த பெண்ணின் கதறல் ரத்தம் வடிந்த குழந்தை பொம்மை என் தேசம் பதுங்கு குழியின் உள்ளே புதைய சம்மதமா? தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே! விளக்கேந்திய மாடமெல்லாம் விழுந்தே போனதோ! ஊஞ்சலாடிய முயலை நீந்திப்பழகிய வாவி எல்லை என் தோப்பில் அடைந்த பூங்குருவிகள் எங்கு போனதோ என் தோட்டத்தில் ஈன்ற தாய் பூனை என்ன ஆனதோ முற்றம் தெளித்திட விடியல் வருமோ! யுத்த யாமத்தில் வாழ்வு முடியுமோ! தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே! மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழம் - நேற்றும் இன்றும் தொடரின் தலைப்பு பாடல் இது. நன்றிகள் : மக்கள் தொலைக்காட்சிக்கும் - பாடலை உணர்ச்சி பெருக்கோடு பாடிய கலைஞர்களுக்கும். .

18 comments:

வானம்பாடிகள் said...

நாமதாங்க காரணம். அவனே சும்மா இருந்தாலும் தினம் அனுப்பிட்டாங்கன்னு இங்க கூவறானே! மனம் கனக்கும் பாடல் வரிகள். இதே ஒரு வங்காளிக்கு நடந்திருக்க விடுவாங்களா?:((

தமிழ் நாடன் said...

வங்கத்துக்கு ஏன்னே போறீங்க? பக்கத்துல இருக்கிற மலையாளத்துக்காரங்களுக்கு நடந்தா உட்ருவாங்களா?

தியாவின் பேனா said...

m m enna seivathu kaalamthaan pathil solla vendum

manam alukirathu
veliye
solla mudiyalai

'ழ'கரம் said...

:(

தமிழ் நாடன் said...

வாங்க தியா!

எல்லாருடைய நிலைமையும் அப்படித்தான் இருக்கு!

தமிழ் நாடன் said...

வாங்க ழகரம்!

ஹேமா said...

என் தாய் பதுங்கு குழியில்.தாயே என்ன பிழை செய்தோம் நாம்.தமிழனாய் ஈழத்தில் பிறந்ததித் தவிர !

http://muniappanpakkangal.blogspot.com/
இது டாகடர் முனியப்பன் பக்கங்கள்.பாருங்கள்.

மதிபாலா said...

என்ன பிழை செய்தோம் நாங்கள் என்று நம்மவர்களைப் பார்த்து கேக்குமளவிற்கு நமது தலைவர்கள் நம்மைக் கொண்டுவந்து விட்டதில் வருத்தமே..!

தமிழ் நாடன் said...

வாங்க ஹேமா!

கையலாகாதா தமிழன் தமிழகத்தில் பிறந்து மட்டும் என்ன பயன் ஹேமா? மொத்தத்தில் தமிழனாகப் பிறந்ததே பிழை என்றே கருதுகிறேன்!

முனியப்பன் ஐயா குறித்த தகவலுக்கு நன்றி!

தமிழ் நாடன் said...

வாங்க மதிபாலா!

அந்த ஆற்றமைதான் எனக்கும்.

Mrs.Menagasathia said...

மனம் கனத்தது....

வெண்காட்டான் said...

thanks for the post. and the lyrics

தமிழ் நாடன் said...

வருகைக்கு நன்றி சகோதரி. மேனகா!

வருகைக்கு நன்றி வெண்காட்டான்!

Muniappan Pakkangal said...

Nice TamilNaadan.

தமிழ் நாடன் said...

நன்றி திரு.முனியப்பன் ஐயா!

Anonymous said...

M in jakarta

how r u?

yasavi

RAMYA said...

மனதிற்கு ரொம்ப கஷ்டமா போச்சு படிக்க :(

Suwathy said...

No more hopes for Eelam Tamils.