தமிழ் மண்ணுக்கு உயிர் தந்த வேங்கைகளே
நீங்கள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டிருக்கிறீர்கள்
எதிரிகள் நீங்கள் புதைக்கப்பட்ட தலத்தை அழித்திருக்கலாம்
ஆனால் நீங்கள் எங்கள் மனங்களில் பதித்துவிட்ட தடத்தை அழிக்கமுடியாது
நீங்கள் செந்நீர் சிந்தி வளப்படத்தியிருக்கிற எங்கள் தேசம்
இன்று வரைபடத்தில் இல்லாமல் இருக்கலாம்
ஆனால் மனதேசத்தில் இல்லாமல் இல்லை
அது உங்கள் கனவு நாங்கள் மெய்ப்படுத்தப்போகும் நனவு!
வணங்குகிறோம் இந்நாளில் உங்கள் பாதங்களை!
போற்றுகிறோம் உங்கள் ஆத்ம தியாகத்தை!
தமிழீழத் தாயகம் அது உலகத் தமிழர்களின் தாகம்!
.
1 comment:
எம் வீரர்களுக்கான அஞ்சலியில் உங்களோடு நானும்.
Post a Comment