Friday, 22 May 2009
நாம் எங்கே வாழ்கிறோம்?
நாம் எங்கே வாழ்கிறோம்?
நீதி என்பது என்ன?
அது எல்லோருக்கும் ஒன்றா?
மனித உயிர்கள் ஒன்றுக்கொன்று சமமானவை இல்லையா?
உண்மையில் மனிதம் சுதந்திரம் என்ற வாழ்வியல் கோட்பாடுகள் இருக்கின்றனவா?
கொள்கை கோட்பாடுகள் என்பனவெல்லாம் வெற்றுக்கோழங்களா?
நியாயம் அநியாயம் என்று எப்படி பிரிப்பது?அதை பகுப்பது யார்?
பணம் என்பதுதான் வாழ்க்கையின் ஒரே நோக்கமா?
பணமில்லாதோர்க்கு வாழ்க்கையே இல்லையா?
பணத்தால் எல்லாவற்றையும் வாங்கிவிடலாமா?
உண்மையில் மக்கள் முட்டாள்களா?
அல்லது மக்களுக்கு மனசாட்சி இல்லையா?
அல்லது மனித இனம் அழிவு நிலையை நோக்கி போகிறதா?
அதிகாரம் என்பது என்ன? அதை யாருக்கு யார் கொடுத்தார்கள்?
மக்களாட்சி என்பது என்ன? அது இன்னும் இருக்கிறதா?
யார் ஆபத்தானவர்கள்? சர்வாதிகாரிகளா? சனநாயகவாதிகளா?
கூட்டாட்சி என்பது என்ன?
இந்தியா ஒரு கூட்டாட்சி நாடா?
இந்தியாவில் சனநாயகம் இருக்கிறதா?
வேற்றுமையில் ஒற்றுமை என்பது வெறும் கூப்பாடா?
உண்மையில் சட்டம் என்பது என்ன?
அது நல்லவர்களுக்கு கவசமா? தீயவர்களுக்கு கவசமா?
பொதுவுடமை என்ற கோட்பாடு இருக்கிறதா?
நாட்டை ஆள்பவர்கள் எல்லாம் 200 ஆண்டுகள் வாழ்கிறார்களா?
மனிதன் விலங்குகளைவிட எந்த விதத்தில் மேலானவன்?
பாவம் புண்ணியம் என்று ஏதாவது இருக்கிறதா?
கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா?
அவர் எப்போது வருவார்?
இங்கு நடப்பவைகள் எல்லாம் அவருக்குத்தெரியுமா?
தெரியும் என்றால் ஏன் தடுக்கவில்லை?
இப்போது தடுக்கவில்லையெனில் எப்போது தடுப்பார்?
இயற்கையின் நியதிகள் என்ன?
வாழ்க்கையின் பலன்கள் யாரால் நிர்ணயிக்கப்படுகின்றன?
எதை நம்புவது விதியையா? வாழ்க்கையையா?
இனி பூமியில் தர்மம் என்பதே இருக்காதா?
நாம் வாழ்வது எதற்கு?
எதற்குமே விடை தெரியவில்லை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment