எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Monday, 31 August 2009

மௌனத்தின் பயங்கரம்!

தமிழர்களின் இன்றைய மவுனம் என்னை மிகுந்த அச்சத்திற்கு உள்ளாக்குகிறது. நான் இங்கே தமிழர்கள் என்று விளிப்பது நம் தாய் தமிழகத்தின் ஆறுகோடி மக்களைத்தான். அவர்களை ஆளும் அல்லது ஆண்ட அரசியல்வாதிகளை அல்ல. இத்தகையோரின் மௌனத்தையோ எழுச்சியையோ நாம் பொருட்படுத்தவேக் கூடாது என்பது கடந்தகாலம் நமக்கு கற்றுக் கொடுத்த பாடம். ஆனால் உலகத்திலேயே மிகுந்த குடும்ப பிணைப்பும் மனிதமும் கொண்ட நம் தமிழினம் இப்படி உணர்ச்சியற்ற கட்டைகளாக மாறிப்போனதை நினைத்து உண்மையில் பெரும் அச்சமாக உள்ளது. போனவாரம் சேனல் 4 ஒரு கானொளிப்பதிவை வெளியிட்டார்கள். இளகிய மனது படைத்தோர் கானக்கூட அஞ்சக்கூடிய ஒரு பதிவு அது. இலங்கை முகாமிலிருந்த கடத்தி செல்லப்படும் தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்து, நிர்வாணமாக்கி, மைதானமொன்றில் கண்களையும், கைகளையும் கட்டிவிட்டு இலங்கை இராணுவம் சுட்டுக்கொல்லும் கொடூரக்காட்சி இது. காண்போரை கலங்கவைக்கும் இந்த கானொளிப்பதிவை கண்ட அன்றிரவு என்னால் தூங்கவே முடியவில்லை. இத்தகைய காட்டுமிராண்டித்தனம் ஏதோ பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நிகழவில்லை. தமிழகத்திலிருந்து ஒரு சில மைல் தொலைவிலேயே நிகழ்ந்துள்ளது. ஆனால் பெருவாரியான தமிழக மக்களிடமிருந்தோ அல்லது ஊடகங்களிடமிருந்தோ இது குறித்த கண்டனமோ எதிர்ப்போ கானப்படவில்லை. சாருக்கான் அமரிக்காவில் குடியேற்ற அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்ட நிகழ்வையும் அதனால் சல்மான்கான் அமரிக்க பயணத்தை கைவிட்டதையும் தலைப்பு செய்திகளில் வெளியிட்டு தன் நாட்டுப்பற்றை பறைச்சாற்றிக்கொண்ட நமது தமிழக ஊடகங்கள் இந்நிகழ்வை கண்டுகொள்ளவே இல்லை. இந்த ஒரு நிகழ்வு குறித்து மாத்திரமல்ல மே மாதம் 18 ம் தேதிக்கு சற்று முன்பும் அதற்கு பிறகும் வன்னிப்பகுதியிலே சிங்கள படையினரால் அறங்கேற்றப்பட்ட கொடுமையான நிகழ்வுகள் குறித்தும் யாரும் இன்றுவரை வாய்திறக்கவில்லை. கிட்டத்தட்ட மூன்று லட்சம் தமிழ் மக்கள் ஒரு சிறு நிலப்பரப்பில் மின்சார வேலிகளுக்கிடையில் மூன்றுமாத காலமாக அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு நிகழ்ந்துகொண்டிருக்கிற நிகழப்போகிற பயங்கரம் குறித்து அச்சப்பட்டு ஈனக்குரலில் அவர்கள் எழுப்பும் குரல் நம் காதுகளை எட்டாதது வியப்பை தருகிறது. இது குறித்து சிறிய பிரஞ்ஞையே யாருக்கும் இல்லாதது ஏன் என்று தெரியவில்லை. இப்படி நிகழ்வது முதல்தடவையல்ல. எண்பதுகளில் தமிழீழத்தில் போராட்டம் வெடித்தது முதல் இன்று வரை சிங்களர்கள் இது போன்ற பல அட்டூழியங்களை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார்கள். விடுதலைப்புலிகளை ஒடுக்குகிறோம் என்று சொல்லி இலங்கை பேரினவாத அரசு ஒரு திட்டமிட்ட இன அழிப்பை செய்கிறது அதற்கு என் காந்தி கண்ட தேசம் துணை போகக்கூடாது என்று கத்தினோம் கதறினோம். ஆனால் காந்தி பேரைச்சொல்லியே ஐம்பது வருடமாய் இந்தியாவை கொள்ளையடிக்கும் கும்பலின் காதுகளில் எங்கள் குரல் விழவில்லை. அதே போல அவர்களுக்கு பல்லக்கு தூக்கும் தமிழக கட்சிகளின் காதுகளிலும் அது விழவில்லை. ஆனால் மனசாட்சியுள்ள நம் தமிழக மக்களும் அவர்கள் கொடுத்த இலவசங்களால் செவிடாகிப்போனதைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை. தேர்தலில்தான் இப்படி என்றால் தேர்தலுக்குப்பிறகும் தன் சொந்த இனம் இப்படி அநியமாக அழிக்கப்படுவதை நம் தமிழகம் கண்டும் கானாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. விடுதலைப்புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டார்கள் என்று கொண்டாடி மகிழ்ந்தவர்கள் இன்னும் ஏன் தமிழர்களை இப்படி கொட்டடியில் அடைத்து வைக்கவேண்டும். ஐம்பது சதவீத ஈழத்தமிழினம் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டது. மீதமுள்ளோரையும் வாழத்தகுதியற்ற நடைப்பினமாக மாற்றவேண்டும் என்பதுதான் அவர்களின் குறிக்கோள். இதற்கு தெரிந்தோ தெரியாமலோ தாய் தமிழர்களாகிய நாம் உதவியாக இருக்கிறோம் என்பதை ஏன் தமிழக மக்கள் உணர மறுக்கிறார்கள் என்பது புரியவில்லை. நமக்கும் நாளை இப்படி ஒரு நிலை வராது என்பது என்ன நிச்சயம்? தன்னை மனித குல காப்பாளர்களாக காட்டிக்கொள்லும் உலக நாடுகள் மற்றும் ஐக்கியநாடுகள்சபை போன்ற சர்வதேச அமைப்புகள் எல்லாம் அதிகார வர்க்கத்தின் எடுபிடிகள்தான் என்பதை இலங்கை விவகாரத்தில் அவர்களின் நடவடிக்கைகள் வெட்ட வெளிச்சமாக்கிவிட்டன. இந்த அமைப்புகள் போடும் சட்டதிட்டமெல்லாம் ஏழை நாடுகளை அதிகார நாடுகள் ஒடுக்கி வைப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்ற உண்மை இப்போது தெளிவாகி இருக்கிறது. காந்தி கண்ட தேசமென்றும் அகிம்சையை உலகத்துக்கு போதித்தவர்கள் என்றும் வேசம் போடும் போலி கதர்சட்டைகளின் கோரமுகம் இன்று வெட்ட வெளிச்சமாய் தெரிகிறது. ஆனால் இவ்வளவு நடந்த பிறகும் நமது சொந்த தமிழினம் காட்டும் இந்த மௌனத்தின் பயங்கரம்தான் எனக்கு புரியவில்லை. ஒரு வேளை வடக்கத்தியர்கள் புரிந்து கொண்ட அளவிற்கு நாம் நம்மினத்தை புரிந்து கொள்ளவில்லையோ? .

10 comments:

மதிபாலா said...

உண்மையில் நமது மெளனம் கவலைக்குரியதுதான்.!

அஹோரி said...

ஒரு கேவலமான ஜென்மத்தின் மவுனம் தான் தமிழகத்தின் மவுனமாக உள்ளது. போகட்டும் , அந்த அரசியல்வாதியை தூக்கிவைத்து கொண்டாடும் இழி பிறப்புகளின் மவுனத்தை என்ன சொல்ல?

தமிழ்மகன் said...

உண்மையில் நான் வெட்கப்படுகிறேன். நம் சகோதரர்களை காப்பாற்ற நமக்கு துப்பு இல்லை. வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களின் ஒற்றுமை,அவர்கள் இலங்கை தமிழர்களுக்காக கூடுக்கும் குரல் கூட இந்த தமிழகத்தில் இல்லை.

என்னால் அரசியல் கட்சிகளுக்கு எதிராக ஒட்டு தான் போட முடிந்தது.

யார் காப்பற்றுவார்கள் எங்கள் இலங்கை தமிழனை???????????????????

இந்த கேள்விக்கு பதில் தெரிந்தால் அவர்களுடன் இனைந்து குரல் கூடுக்கலாம் ஆனால் பதில்?????

உங்களுக்கு பதில் தெரிந்தால் கூருங்கள். இனைந்து குரல் கூடுக்க நான் தயார்.

தமிழ் நாடன் said...

வாருங்கள் மதுபாலா!

தமிழ் நாடன் said...

அதைத்தான் நானும் நினைக்கிறேன் அஹோரி. அரசியலுக்கு அப்பாற்பட்டு ஏன் யாரும் இந்த பிரச்சினையை அனுகவில்லை என்று தெரியவில்லை.

தமிழ் நாடன் said...

திரு வி.கே.ரவி உங்களைப்போன்ற பல துடிப்புள்ள இளைஞர்களின் கேள்வி இதுவாகவே உள்ளது. ஆனால் நம்மையெல்லாம் வழி நடத்தி செல்ல தகுதி மிக்க முத்துக்குமார் தியாகி ஆகிவிட்டான். ஆனால் இது குறித்த விழிப்புணர்வை நம் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். நாம் பணிபுரியும் இடங்களில் இருக்கும் நண்பர்களிடம் இது குறித்த பிரஞ்ஞையை உருவாக்கவேண்டும். வெளிமாநில வெளி இன நண்பர்களிடம் ஈழத்தில் நடக்கும் அவலங்களை கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொருவரும் நம்மால் முடிந்த பத்து பேரின் மனதை மாற்றினாலே மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும். சென்ற தேர்தலின் போது என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் 30 பேரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தமிழின விரோதிகளுக்கு எதிராக வாக்களிக்க கேட்டுக்கொண்டேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என் நண்பர்களிடம் இது பற்றி பேசுவேன். இவ்வாறு ஒவ்வொரு படித்த தமிழனும் தன்னால் முடிந்த அளவு அவரவர் தளங்களிலிருந்து செயல்பட்டாலே ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கமுடியும்.

JS RAMKUMAR said...

மிகவும் கவலையான பதிவு .

மனம் கலங்கி விட்டது நண்பரே.

நம் மக்களுக்கு அரசியல்வாதிக்கு , நடிகனுக்கு கொடி பிடிக்கவே நேரம் சரி போதவில்லை

நாம் எல்லோரும் இணைந்து போராடி, நம் இலங்கை சகோதொரர்களுக்கு சுதந்திரம் வாங்கி கொடுக்க வேண்டும்.

வழி நடத்த நமக்கு தலைவன் தான் இல்லை.

- கவலையுடன்
ஜெய்செல்வம்
ராம்குமார்

தமிழ் நாடன் said...

வாருங்கள் திரு ஜெய்செல்வம், ராம்குமார் !

நான் மேலே திரு வி.கே.ரவி அவர்களுடன் பகிர்ந்து கொண்ட கருத்தையே உங்களுக்கும் சொல்ல விழைகிறேன்.

Anonymous said...

Ratiri vizhikeddum

nicceyemadre kaletil vazhum sarasari iizhet taleimureighelei
kapadruvom.Ileiye talebathighelage vazhi vagupom.

sagele selvenggeleiyum pedru sugemane vazhkei valum India itheyenggele suthenthire vedriyin suwasekadrei parimari kolvom.
ithuwarei saddettei thane mindum-mindum tiruttinom,athu tirunthathu.samugettei?Astivareme aadum pothu jannelukkenne varne puccu?
indiavil viyabarem seiye vantheverghel aresiyel nadetinarghel,aresiyel nadete vantheverghel viyabarem seigirarghel.irendilum nadde paddethu naamthane indiyene?

saddem verum veelithan,naam veeliyei tiruttinal vileicel perugathu. irete neiyil nambikei suder edrunggel.
ezhei kannirei tudeitu kaayevaikethan nam pattu virelgel pade-padeke vendum.
ithuvarei nam uumei visareneiyil ureikepaddethellam kileddu saddenggelei partu ezhuthiye pazhentiirpughel.anthe saddenggeleiye thandike,tirpugelei tiruti ezhuthuvom.ivei maanudettei maruthalikum,sambirthaye saddenggelei piditu ulukum.
suthenthirem athu teidi kideikathe thevamirthem alle,manude kadelin manithamirthem,sametuvetin madem.
naam iizhetamil sonthenggel irupethu engge endru uumei kelviku bathil teduvom.tirathe sanggedetil sanggemikkum nam sagotherergelin ratiri vizhikeddum.

Anonymous said...

Tamizherghele,saddettin athiberghele,manitherghele, vaarunggel!!! ellorum nam mane tareighelei thuusi taddi vaipom,indrillei eninum koodiye vireivil iizhettamilerghelin tiirathe kodumeighelei paddriye nineivughel angge ileipare varelam.