Monday, 26 October 2009
காடோ காடோ 02.09
அண்மைக் காலங்களில் இந்தோனேசிய ஊடகங்களில் அதுவம் மின்னனு ஊடகங்ளில் இரு பெண்களின் பெயர்கள் மிக பரபரப்பாக பேசப்பட்டன. அதுவும் வலைப்பக்கங்களில் இவர்கள் பற்றிய செய்திகள் அதிக அளவில் விவாதிக்கப்பட்டன. அந்த செய்தி நாயகிகளில் ஒருவர் பிரித்தா முல்யாசாரி. இரு குழந்தைகளுக்குத் தாயான இவர் சகார்த்தாவின் புறநகர் பகுதியான தங்கரங்கில் வசிக்கிறார். இவர் அனுப்பிய ஒரு மின்னஞ்சல்தான் இவரை இந்த அளவுக்கு பிரபலமாக(??!!) ஆக்கியது. பிரச்சனையிலும் மாட்டிவிட்டது! சிலமாதங்களுக்கு முன் தனக்கு ஏற்பட்ட டெங்கு காச்சலுக்கு சிகிச்சை பெற இங்குள்ள பிரபல மருத்துவமனை ஒன்றிற்குக்கு பிரித்தா சென்றுள்ளார். அந்த மருத்துவமனையில் இவருக்கு அளிக்கப்பட்ட சேவை மிகவும் மோசமாக இருந்துள்ளது. பிரித்தா இதனால் கடும் அதிருப்தியும் மன உளைச்சலும் அடைந்துள்ளார். மருத்துவமனையை விட்டு வந்த பிறகும் தான் அங்கு நடத்தப்பட்ட விதம் குறித்து அவரால் மறக்க முடியவில்லை. ஆனால் அதை அப்படியே விட்டுவிட அவருக்கு மனம் வரவில்லை. தன் ஆற்றாமையை வெளிப்படுத்தும் விதமாக அந்த மருத்துவமனையில் தனக்கு ஏற்ப்பட்ட மோசமான அனுபவங்களை விவரித்து ஒரு மின்னஞ்சல் எழுதினார். அதை தான் உறுப்பினராக உள்ள ஒரு வலைக்குழுமம் மூலமாக அதன் உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுப்பினார். அவரது ஆதங்கத்தில் உள்ள நியாத்தை உணர்ந்த உறுப்பினர்கள் தங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அவற்றை அனுப்பியுள்ளனர். இதனால் பிரித்தாவின் மின்னஞ்சல் இந்தோனேசியா முழுவதும் பரவியது. இது குறித்த செய்திகள் பல பத்திரிக்கைகளிலும் வெளியாயின. பதிவர்கள் பலரும் இது குறித்து பல இடுகைகள் எழுதினர்.
இதனால் அந்த மருத்துவமனையின் பெயர் மக்கள் மத்தியில் மிக மோசமாகியது. இதனால் மருத்துவமனை நிர்வாகம் கடும் எரிச்சல் அடைந்து பிரித்தா மீது மான நட்ட வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம் அவருக்கு ஆறு வருட சிறை தண்டனையும் நட்ட ஈடாக ஒரு லட்சம் அமரிக்க டாலர்களும் விதித்து தீர்பளித்தது. இதைக்கண்ட பொதுமக்களும், பெண்கள் அமைப்பினர்களும் மின்னனு ஊடகத்தை சேர்ந்தவர்களும் கடும் அதிர்ச்சி அடைந்து போராட்டத்தில் குதித்தனர். நீதிமன்ற முடிவை எதிர்த்து மின்னனு ஊடகங்களில் அனல் பறக்கும் விவாதங்கள் நடந்தன. பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் அவருக்கென்று தனி அரங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் கிட்டத்தட்ட முப்பது லட்சம் பேர் பிரித்தாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். நிலைமை கைமீறிப்போவதை உணர்ந்த அரசு அவரது சிறைத்தண்டனை வீட்டுக்காவலாக மாற்றும்படி நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டது. மேலும் அவருக்கு அதிக பட்ச தண்டனை அளிக்க காரணமான அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறையினர்கள் செயல் பாடுகள் குறித்த கேளிவிகளும் பல சட்ட வல்லுனர்களால் எழுப்பட்டது. இதனால் சட்டத்துறையும் காவல்துறையும் ஒன்றையொன்று பரஸ்பரம் சந்திக்கு வந்து குற்றம்சாட்டிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. நடந்து முடிந்த குடியரசு தலைவர் தேர்தல் பிரச்சாரத்தில் கூட பிரித்தாவின் விடயம் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது. தற்போதைய குடியரசு தலைவரின் முக்கிய போட்டியாளராக விளங்கிய முன்னாள் குடியரசு தலைவர் மேகாவதி கூட பிரித்தாவை வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
இவ்வளவுக்கு பிறகும் பிரித்தா தற்போதும் வீட்டுக்காவலில்தான் உள்ளார். விரைவில் அவர் மீதான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது. இதில் அவர் விடுவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக சட்ட வல்லுனர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் பிரித்தாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் அவர் தரப்பு நியாத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் வகையிலும் இந்தோனேசிய வலைப்பதிவர் கூட்டமைப்பு ஒரு ஏற்பாட்டை செய்தது. ஆண்டுதோறும் நடைபெறும் “பெஸ்தா பிளாக்கர்” எனும் தேசிய அளவிலான ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் பிரித்தாவை சிறப்பு பேச்சாளாராக கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்தது. அதன்படி கடந்த அக்டோபர் 24 ந்தேதி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரித்தா கலந்து கொண்டார். தொடக்கம் முதல் தனக்கு ஏற்பட்ட அநீதியை எதிர்ப்பதில் வலைப்பதிவர்கள் முன்னிலை வகித்ததை அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
வலைப்பதிவுகள் பொழுது போக்கு என்ற இலக்கினைத் தாண்டி சமூக அக்கறையுடனும் செயல்பட முடியும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
000000000000000000000000000000000000000000000000000000000
பிரித்தாவுக்கு அடுத்த படியாக இந்தோனேசிய ஊடகங்களில் அண்மைக்காலங்களில் அதிகம் அடிபடும் பெயர் மரியா கோசோவா சுருக்கமாக ”மியாபி”. சப்பானில் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலமான விளம்பர அழகி இவர். மியாபி இந்த அளவுக்கு பிரபலமாகக் காரணம் அவர் நடித்துள்ள ஆபாச படங்கள் தான் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தோனேசியாவில் உள்ள மேக்சிமா பிச்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மியாபியை வைத்து ஒரு முழுநீள நகைச்சுவை படம் ஒன்றை தயாரிக்கத் திட்டமிட்டது. இந்தோனேசிய வாலிபர் ஒருவர் மியாவி மீது மய்யல் கொண்டு அவரை இந்தோனேசியாவுக்கு கடத்தி வருவதையும் அதைத் தொடர்ந்து அவர்கள் இடையில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் நகைச்சுவையாக சொல்லும் படமாம் இது. இந்த படத்தின் பட பிடிப்புக்காக மியாபி சென்ற மாதம் இந்தோனேசியா வர இருந்தார். ஆனால் அவரது வருகையை எதிர்த்து சில அமைப்பினர் சகார்த்தாவில் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆபாச படங்களில் நடித்த ஒருவர் இந்தோனேசியா வருவது இந்தோனேசிய மக்களின் ஒழுக்கத்தைப் பாதிக்கும் என்று வாதிட்டனர். அரசுக்கும் இது தொடர்பாக கடும் நெருக்கடி கொடுத்தனர். இதைத் தொடர்ந்து அரசு மியாபியின் புகல் உரிமைச் சீட்டை நிறுத்திவைத்தது. அரசின் இந்த முடிவு மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் உரிமை அமைப்பினர் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அவர் ஆபாச படங்களில் நடித்துள்ளதைக் காரணமாக காட்டி அவர் இந்தோனேசியா வருவதை தடை செய்வது மனித உரிமை மீறல் என்று பலர் வாதிட்டனர். வழக்கம்போல் மின்னனு ஊடகங்களிலும் வலைப்பதிவுகளிலும் மியாபி பிரச்சினை கண்ணாபிண்ணா என்று விவாதிக்கப்பட்டது. ஊடகத்துறை அமைச்சரே தலையிட்டு விளக்கம் தர வேண்டிய அளவுக்கு இந்த விடயம் போனது.
விளைவு???? ஜப்பான் இளசுகளிடம் பிரபலமான “மியாபி” இப்போது இந்தோனேசியா இளசுகள் மத்தியிலும் மிகவும் பிரபலமாகிவிட்டார். அவர் நடித்த ஆபாசப்படங்கள் இந்தோனேசியாவில் பெரிய அளவுக்கு விற்பனையாகின்றனவாம். தொலைபேசி செய்தால் போதும் நேரில் பட்டுவாடா என்ற அளவுக்கு இணையத்தில் கூவி கூவி விற்கிறார்கள். தொலைபேசியில் மியாவி படம், கணணித்திரையில் மியாபி படம் நோட்டுப்புத்தகங்களில் மியாபி படம் என்று எங்கு நோக்கினும் இளசுகள் மத்தியில் மியாபி நீக்கமற நிறைந்துவிட்டார். அவரை எதிர்த்து போராட்டம் செய்தவர்கள் இதைத்தான் எதிர்ப்பார்த்தார்களா என்பது புரியவில்லை.
சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுப்பது என்பது இப்படித்தானோ?
0000000000000000000000000000000000000000000000000000000
இந்தோனேசியாவின் கிழக்கு சாவா மாகாணத்தில் உள்ளது உங்காரன் என்னும் நகரம். இங்குள்ள ஒரு மத நிறுவனத்தின் தலைவர் புஜியோ சாயோ விடியாந்தோ சுருக்கமாக சேக் புஜி. நாற்பத்தி மூன்று வயதான புஜி பெரும்பணக்காரர். அவருக்கு ஏற்கனவே இரு மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் அவர் மூன்றாவதாக பனிரெண்டு வயது சிறுமி ஒருவரை அண்மையில் மணமுடித்துள்ளார். இது குறித்து செய்திகள் வெளியானதும் பல சமூக ஆர்வலர்கள் மற்றும் அமைப்பினர்கள் தங்களின் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர். அவர் மீது காவல் நிலையத்தில் பெண் குழந்தைகள் காப்புரிமை சட்டத்தின் வாயிலாக வழக்கும் தொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த வாரம் இவர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது வாதாடிய புஜி தரப்பினர் இசுலாம் மதச்சட்டப்படி இத்திருமணம் செல்லும் என்றும் இதில் எந்த தவறும் இல்லையென்றும் வாதிடினர். ஆனால் இது நடப்பில் உள்ள குழந்தைகள் காப்புரிமை சட்டத்தின்படி தவறு என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் புஜி மீதான வழக்கு சரியான முறையில் தொடுக்கப்படவில்லை என்று கூறி புஜியை விடுதலை செய்து தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை பார்த்த பல பொதுமக்களும் ஊடகங்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளன. அரசு தரப்பும் மேல் முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. பல பெண்கள் அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட போது நீதிமன்றத்தில் இருந்த புஜியின் இரு மனைவிகளும் ஆனந்தகண்ணீர் (????!!!!) விட்டது குறிப்பிடத்தக்கது.
மியாபியின் வருகையை எதிர்த்த அமைப்பினர் புஜிக்கு ஆதரவான இந்த நீதி மன்ற தீர்ப்பு குறித்து என்ன சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்தியாவிலும் சரி இந்தோனேசியாவிலும் சரி நீதி மன்றங்கள் சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்குவது வாடிக்கையாகி வருகிறது.
கைப்புன்னுக்கு கண்ணாடி வேண்டுமா? நீதிமன்றங்கள்தான் பதில் சொல்லவேண்டும்.
.
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
kaado, kaado
newso news
:)
யாசவி! அதுக்குள்ளயா படிச்சி முடிச்சிட்டீங்க? எங்க இருக்கறீங்க? வருகைக்கு நன்றி!
ஓட்டுப் போட்டாச்சு.அப்புறமா வாசிக்கிறேன்.
மிக்க நன்றி ஹேமா!
எங்கன்னாலும் காசுதான் சட்டம் போல. நல்ல தொகுப்பு. நன்றி. தமிழ்மணம் ஓட்டு பட்டில கைய காணோம். அப்புறம் போடுறேன்.
நன்றி பாலாண்ணே! கை அங்கேயேதானே இருக்குது??!!!!
)))=
இந்த சேக் புஜி மற்றும் அச்சிறுமியின் படத்தை முதல் பார்த்ததும் அவர் மகள் என நினைத்தேன்;
இந்த சேக் புஜி தமிழ்ப்படம் அதிகம் பார்ப்பாரோ; 60 வயதுத் தாத்தாக்கள் 15 வயது சிறுமிகளுடன் போடும் களியாட்டங்களைப் பார்த்து கெட்டுவிட்டார் போலும்.
இந்தோனேசியச் சட்டம் அருமையாக வளையுதே!
இப்போதுதான் அமைதியாக வாசித்தேன்.மூன்று தொகுப்பும் உலக நடப்பு.தேவையானவையே.
//[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...
-:)//
ஐயா ரெண்டு மூனு வார்த்தை எழுதுங்கய்யா!
இஃகி ! இஃகி!
அப்படித்தான் நானும் நினைக்கிறேன் யோகன்!
வருகைக்கு நன்றி!
ரொம்ப நன்றிங்க ஹேமா!
நல்ல காடோ காடோ...
இந்த மியாபி மேட்டரு எப்படி எனக்குத் தெரியாம பூடுச்சின்னு பாக்கறேன்....
வுடுங்க சொல்லிட்டீங்கள்ள? இனி பாத்துக்கறேன்
ஆஹா!! மதிபாலா நீங்களுமா?
சரிதான் சரிதான் நீங்கதான் யூத்தாச்சே!
தமிழ்நாடன்,
உண்மையான காடோ, காடோ சாப்பிட்டுவிட்டேன்.
ஓரளவு நன்றாகத்தான் இருக்கிறது :)
Post a Comment