எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Monday 22 December 2008

யாரைத்தான் நம்புவதோ!

இப்போதெல்லாம் யாரைத்தான் நம்புவதோ தெரியவில்லை. தனியார் நிதி நிறுவனங்கள்தான் பொதுமக்கள் பணத்தை வாங்கிக்கொண்டு கம்பி நீட்டுகிறார்கள் என்றால் அரசுத்துறை நிறுவனங்களும் இதையே செய்வது வருத்தமாக இருக்கிறது. இதுபோன்றதொரு நிகழ்வு பற்றிய தகவல் ஒன்று அண்மையில் வெளிவந்திருக்கிறது. என் நன்பர் ஒருவர் 1993 ஆம் ஆண்டு குசராத் அரசிற்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமான சர்தார் சரோவர் நர்மதா நிகாம் வெளியிட்ட டிடிபி (டீப் டிசுகவுண்ட் பாண்ட்) எனும் கடன் பத்திரத்தில் முதலீடு செய்தார். சர்தார் சரோவர் எனும் அணையை கட்டுவதற்காக நிதி திரட்டும் பொருட்டு இக்கடன் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. இந்த பத்திரம் ஒவ்வொன்றும் 3600 ரூபாய் முகவிலைக்கொண்டது. இப்பத்திரத்தின் முதிர்வுக்காலம் இருபது வருடங்கள். இவ்வாறு இருபது ஆண்டுகள் கழித்து முதிர்வு பெரும்போது அதாவது 2014-ல் முதிர்வுத்தொகையாக 1,11,000 ரூபாய் கிடைக்கும் என்று பத்திர வெளியீட்டின்போது அறிவித்தார்கள். இதுதான் பத்திரத்திலேயும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. மேலும் இப்பத்திரங்கள் குசராத் அரசால் பாதுகாப்பிற்காக இணைச்சாண்றும் செய்யப்பட்டிருக்கின்றன். அதாவது இத்தகைய நிதி திட்டங்கள் திவாலாகும் நிலைக்கு வந்தால் குசராத அரசு இப்பணத்திற்கு பொறுப்பேற்கும் என்பதுதான் இதன் சாராம்சம். முதலீட்டாளர்கள் விரும்பினால் 9,11 அல்லது 15 ஆம் ஆண்டுகளில் தாமாக முன்வந்து பத்திரத்தை ஒப்படைத்து அன்றைய நிலையில் முதிர்வுத்தொகையை பெற்றுக்கொள்ளலாம். எளிதான மற்றும் பாதுகாப்பான முதலீடு என்பதால் லட்சக்கணக்கான நடுத்தர தட்டு மக்கள் இப்பத்திரத்தில் முதலீடு செய்தனர். இந்நிலையில் சென்ற மாதம் இந்நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது. அதில் இந்நிறுவனத்தின நிதி நிலையை காரணம் காட்டி இக்கடன்பத்திரங்களை முன்கூட்டியே திரும்ப பெற விரும்புவதாகவும் அவ்வாறு திரும்பப்பெறும் போது முதிர்வுத்தொகயாக 50000 ரூபாய் மட்டுமே வழங்கி கணக்கை முடித்துக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு முதிர்வு பெற இன்னும் ஐந்து ஆண்டுகளே உள்ள நிலையில் இத்தகைய அறிவிப்பு முதலீட்டார்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தங்கள் பத்திரம் முதிவடையும் போது 1,11,000 கிடைக்கும் என்று திட்டமிட்டிருந்த முதலீட்டாளர்கள் என்ன செய்வது என்று தெறியாமல் கையைப்பிசைந்து கொண்டிருக்கின்றனர். வழக்கமாக இத்தகைய நீண்டகால முதலீடுகள் தங்கள் குழந்தைகளின் கல்லூரிக் கல்வி அல்லது திருமணச் செலவுகளை மனத்தில் கொண்டே செய்யப்படுகின்றன. மகனோ அல்லது மகளோ பெரியவர்களாகும் போது இது போன்ற முதலீடுகள் உதவும் என்றுதான் மக்கள் இத்திட்டங்களில் முத்லீடு செய்கிறார்கள். இப்போது அவர்கள் என்ன செய்வார்கள்? இப்பிரச்சினையின் காரணத்தை ஆராய்ந்தபோது கிடைத்த தகவல்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அதாவது இந்நிறுவனம் போதுமான வருமானம் குறித்த திட்டமிடல் இன்றி இத்தகைய பத்திரங்களை வெளியிட்டுள்ளதாகவும் மேலும் அவர்கள் எதிர்பார்த்த வருமானம் இந்த திட்டத்தில் கிடைக்கவில்லை என்றும் தெரிகிறது. ஆனால் 2001 ஆண்டு வெளியிடப்பட்ட தலைமை தணிக்கையாளர் அறிக்கையிலேயே இது குறித்து இந்நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. ஆனால் அப்போது இந்நிறுவனம் அவற்றையெல்லாம் புறந்தள்ளியிருக்கிறது. ஆனால் இப்போது நிதி நிலைமை அதளபாதாளத்துக்கு சென்றுவிட்டதால் இந்நிறுவனம் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது. ஒரு வேளை நீதிமன்றம் அல்லது மக்களின் எதிர்ப்பால் இம்முடிவை இந்நிறுவனம் கைவிட நேர்ந்தால் பணத்தை எப்படி திருப்பித்தருவார்கள் என்று தெரியவில்லை. பாதுகாப்பு சானறளித்த குசராத் அரசும் இவர்களுக்கு உதவ முடியுமா என்பது மிகப்பெரிய கேள்வி. ஏனென்றால் இத்திட்டம் 2014-ல் நிறைவடையும் போது இவர்கள் முதலீட்டார்களுக்கு திருப்பித்தர சுமார் 8100 கோடி ரூபாய் தேவைப்படும். இது இம்மாநிலத்தின் அன்றைய நிதித்திட்டத்தின் மதிப்பில் பாதியாக இருக்கும். இந்த ஒரு முதலீட்டு திட்டத்திற்காக மட்டும் தனது மொத்த நிதியின் பாதியை இழப்பது ஒரு அரசு சாத்தியமானதாக இருக்காது. அப்போ முதலீட்டாளர்களின் கதி? அதோகதிதான். இன்னொரு அதிர்ச்சியளிக்கும் விடயம் என்னவெனில், முன் காலத்தில் இதேபோன்றதொரு நிதிச்சிக்கல்கள் வந்தபோது இந்நிறுவனம் மேலும் புதிய பத்திரங்களை வெளியிட்டு அதன் மூலம் நிதி திரட்டி பிரச்சினையை தற்காலிகமாக தீர்த்திருக்கிறது. அப்பத்திரங்களும் பெரிய அளவில் விற்பனையாகியுள்ளன என்பதுதான் இதில் பெரிய கொடுமை. அதில் முதலீடு செய்தவர்கள் கதை என்ன ஆகப்போகிறதோ! ஆனால் அப்போதெல்லாம் இம்மாதிரியான பிரச்சினைகளை இந்நிறுவனம் வெளியில் சொல்லவில்லை. இதை தொடர்ந்துதான் 2001ல் தலைமை தணிக்கையாளர் இந்நிறுவனத்தை தனது அறிக்கையில் கண்டித்திருக்கிறார். அரசுத்துறை நிறுவனங்களே இவ்வாறு மக்களை ஏமாற்ற முற்ப்பட்டால் மக்கள் எங்கே போவார்கள் என்று புரியவில்லை! நீதிமன்றம் வழக்கு என்று அலைவதற்கு நடுத்தர வர்க்கத்திற்கு சக்தியிருக்கிறதா?

6 comments:

அக்னி பார்வை said...

ஐயையோ காசு போச்சா... பேசம காச கடல போட வேண்டியது தான்..

தமிழ் நாடன் said...

நன்றி அக்னிபார்வை! மறக்காம வந்து ஆதரிக்கிறீங்க!

Anonymous said...

Rs. 3600 to Rs. 50,000 in fifteen years sounds really good and it is not a bad deal at all!

the amount being offered is very much proportional to the maturity amount.

though it sounds bad, it is really not bad and i think it is very fair

--anvarsha

பட்டாம்பூச்சி said...

2001 ஆண்டு தலைமை தணிக்கையாளர் அறிக்கை வெளியிடப்பட்ட போதே நேர்மையாக நிலைமையை விளக்கி சொல்லி, முடிந்த அளவு முதிர்ச்சி தொகை சேர்த்து, முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி தந்து இருக்கலாம்.௭ வருடத்திற்கு முன் என்றால் முதலீட்டாளர்களுக்கு இழப்பும் அவ்வளவு இருந்திருக்காது.எதிர்ப்பார்ப்பும்,அந்த பணத்தை வைத்து பெரிய திட்டமிடல்களும் அதிகமாக இருந்திருக்காது.ஆனால் அப்படி செய்ய அவர்கள் இ.வா-க்களா என்ன?அதான் பொறுமையாக தூங்கி,குறட்டை விட்டு,பிறகு இதை சொல்லி இருக்கின்றனர் போல.மக்கள் நலன் மீது நம் நாட்டு அரசாங்கத்திற்கு அவ்வளவு அக்கறை.
இவ்விசயத்தை எல்லோருக்கும் பகிர்ந்தமைக்கு நன்றி.
இனிமேலாவது ஆழம் தெரிந்து காலை விடும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்வோம்.வேறு என்ன செய்வது?

பட்டாம்பூச்சி said...

2001 ஆண்டு தலைமை தணிக்கையாளர் அறிக்கை வெளியிடப்பட்ட போதே நேர்மையாக நிலைமையை விளக்கி சொல்லி, முடிந்த அளவு முதிர்ச்சி தொகை சேர்த்து, முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி தந்து இருக்கலாம்.௭ வருடத்திற்கு முன் என்றால் முதலீட்டாளர்களுக்கு இழப்பும் அவ்வளவு இருந்திருக்காது.எதிர்ப்பார்ப்பும்,அந்த பணத்தை வைத்து பெரிய திட்டமிடல்களும் அதிகமாக இருந்திருக்காது.ஆனால் அப்படி செய்ய அவர்கள் இ.வா-க்களா என்ன?அதான் பொறுமையாக தூங்கி,குறட்டை விட்டு,பிறகு இதை சொல்லி இருக்கின்றனர் போல.மக்கள் நலன் மீது நம் நாட்டு அரசாங்கத்திற்கு அவ்வளவு அக்கறை.
இவ்விசயத்தை எல்லோருக்கும் பகிர்ந்தமைக்கு நன்றி.
இனிமேலாவது ஆழம் தெரிந்து காலை விடும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்வோம்.வேறு என்ன செய்வது?

Anonymous said...

Yeah I also think the deal is good giving 50000/= after 15years for the amount of 3600/=