Thursday, 29 January 2009
கருணாநிதி புடவைக் கட்டிக்கொள்ளலாம்?
நம் அரசியல்வாதிகளை நினைத்தால் வயிறு பற்றி எரிகிறது. சிங்கள மிருகம் சரத பொன்சேகா தமிழக அரசியல்வாதிகளை கோமாளிகள் என்று சொன்னபோது இவர்கள் கொதித்தெழுந்தார்கள். அவனாவது வாயால்தான் சொன்னான். ஆனால் மத்தியில் ஆட்சி செய்யும் மானங்கெட்ட காங்கிரசு அரசோ இவர்களை கோமாலிகளைவிட கேவலமான கேனையனாக்கிவிட்டார்கள். ஆனால் நம்மவர்களுக்கு அது உரைத்ததாக தெரியவில்லை. உரைக்கவும் உரைக்காது. அவர்கள் போட்ட எலும்பு துண்டை நக்கியே வளர்த்த உடலாயிற்றே. கருணாநிதியும் சட்டசபையில் பிராணாப் இலங்கைக்கு புறப்பட்டுவிட்டதாக அறிவித்து முழக்கமிட்ட அன்பழகனும் அதற்கு மேசைகளைத்தட்டி ஆரவாரம் செய்த ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் வேட்டிக்குப் பதில் புடவைக் கட்டிக்கொள்ளலாம். இவர்கள் யாரை முட்டாளாக்குகிறார்கள் என்று தெரியவில்லை. இல்லை ஒட்டுமொத்த தமிழினமும் காதில் பூச்சுற்றிக்கொண்டு திரிகிறார்கள் என்று நினைக்கிறார்களா? பிரணாப் ராசபக்சேவுடன் விருந்துசாப்பிட்டுவரத்தான் இவர்கள் டெல்லிக்குப் பறந்து சென்று மனு கொடுத்துவிட்டு வந்தார்களா? அதுவும் எங்கள் வரிப்பணத்தில்!
நாம் கொடுத்த வரிப்பணத்தில் சப்ளை செய்த ஆயுதங்களால்தான் நம் சகோதரிகளின் தாலி அறுக்கிறான் சிங்களவன். இந்தியாவின் இறையாண்மையென்று எதையோ சொல்லி எங்களை ஏமாற்றும் துரோகிகளே! எங்களிடம் இருந்து பெற்ற வரிப்பணத்தைக்கொண்டே எங்களின் சொந்தங்களை கருவறுக்க உதவுவதுதான் காந்தி கண்ட தேசத்தின் இறையாண்மையா? மானங்கெட்டத்தமிழனே சிந்திக்கமாட்டாயா? தங்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதிக்கும் ஒரு நாட்டில் வாழும் தமிழன் தன்னை இந்தியன் என்று எப்படி மனமார இனங்காட்டிக்கொள்வது? திபத்திற்கும் வங்காளதேசத்திற்கும் ஒரு கொள்கை எங்கள் தமிழனத்திற்கு ஒரு கொள்கையா? நீங்கள் பிரித்துக்கொடுத்த வங்கதேசத்தில் இருந்துதானே அனுதினம் தீவிரவாதி எங்களுக்கு குண்டுவைக்கிறான். உங்களின் ஏகாதிபத்திய ஆசையால் போர்களில் எங்கள் சொந்தங்கள் உயிர்விட்டதற்கு நீங்கள் தானே காரணம். இப்படி எங்களின் பல ஆயிரம் உயிர்களை அழித்த நீங்கள் இங்கு போய்விட்ட ஒரு உயிருக்காக ஓலமிட்டு எங்கள் இனத்தையே அழிக்க நினைக்கிறீர்களே? உங்களின் தவறான முடிவால் அழிந்துபோன எங்களின் ஆயிரக் கணக்கான உயிர்களுக்கு யார் பதில் சொல்லப்போகிறீர்கள்?
நாங்கள் என்ன உங்களை விடுதலைப்புலிகளுக்கு ஆயுதமா தரச்சொன்னோம். அங்கே போரைத்தானே நிறுத்தச்சொன்னோம். போர் என்ற பெயரில் ஒரு இனத்தையே அழித்துக் கொண்டிருக்கிறான் சிங்களவன். எங்களின் ஏதுமறியா குழந்தைகளும் சிறுவரும் பெண்களும் கொல்லப்படுகிறார்கள். புலிகளின் நிலைகளை வேவு பார்த்துச்சொல்கிற உங்கள் விமானங்களின் கண்களுக்கு அப்பாவி மக்கள் கூண்டோடு கொள்ளப்படுவது மட்டும் தெரியவில்லையா? ஐநா வும் சர்வதேச சமூகமும் கண்டிக்கிற போது நீங்கள் மட்டும் விருந்துக்கு போய் கொட்டிக்கொள்கிறீர்களே? நீங்களெல்லாம் மனிதர்களா? இன்னும் இவர்களின் அரசுகளில் ஒட்டிக்கொண்டு இன்னும் சில்லரைகளை பொறுக்கிக்கொண்டிருக்கும் தமிழ் மந்திரி அவதானிகளே! உங்களின் உடம்பில் ஒடுவது என்ன? விடுதலைப்புலிகள் ஆயுதங்களை போட்டுச் சரணடைந்தால் பிரச்சினைத்தீரும் என்று கூறும் செயலலிதாவே! ஏன் நீங்கள் இதையே சிங்களவனைப் பார்த்து சொல்லக்கூடாது? விடுதலைப்புலிகளுக்காக சிங்களவர்கள் அப்பாவி பொதுமக்களை கொள்வதை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்களா? தமிழினத்தின் அழிவைப்பற்றி உங்களுக்கென்ன கவலை. அவனதான் நீங்கள் ஏறி மிதித்தாலும் உங்கள் கால்களில் விழுந்துகிடக்கிறானே. தன் இனத்தை அழிக்கும் சிங்களவனுடன் கைகோர்க்கும் அரக்கிகளையும் அம்மா என்று அழைத்து கொண்டாடும் மானங்கெட்ட இனம் தமிழினமே! உன்னை யார் காப்பாற்றுவது?
காட்டிக்கொடுத்த கருணாவுக்கு மூன்று பக்கம் ஒதுக்கும் பத்திரிக்கைகளே! எங்கள் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டபோது மட்டும் வாயை இறுக்கி மூடிக்கொள்கிறீர்களே! ஏன்? உங்களின் மேலாதிக்க வெறி இன்னும் அடங்கவில்லையா? எம்மக்கள் போடும் பிச்சைக் காசிலே கொழுத்த நீங்கள் சாப்பிட்ட இலையிலேயே மலம் கழிக்கிறீர்களே?
உணர்வுள்ள தமிழர்களே ! இனியாவது விழித்தெழுங்கள்! இந்த மானங்கெட்ட அரசியல்வாதிகளை புறந்தள்ளுங்கள். நம்மால் இயன்ற அளவுக்கு நம் எதிர்ப்பை சர்வதேச சமூகத்திற்கு தெரிவியுங்கள். தமிழினத் துரோகிகளை உலகுக்கு வெளிச்சமிட்டுக்காட்டுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
sariya sonninga anna... inime chennai silksku sneha vanthu aada thevayila.karunanithiya vachche aada vaikalam....
தயவுசெய்து கருனாநிதியைக் கிண்டல் பண்ண வேண்டாம். அவர் தன் பதவிக்காக சோனியாவிடம் கோவணாத்தை விற்றுவிட்டு தமிழுக்கு சேவை செய்கிறார். அவருக்கு சேலை வேண்டாம் ஒரு கோவணம் இருந்தால் கொடுக்கவும்.
புடவை கட்டிக் கொள்வார், அவர் மகளுக்கு
மத்தியில் இன்னொரு அமைச்சர் பதவி
கிடைக்குமென்றால்.
ஒரு வரலாற்று பெருமைமிக்க இனம், இன்று
அகதி மாதிரி வாழக் காரணம்,நம் அரசியல்வாதிகளின்
பதவிப் பித்து தான்.
i am delighted to see a tamilian in Jagartha!
well done boys:if u haoppen to see any congress mama ther,pl inject poision:atleast ,disease will not spread!
pudavi kattikollavathanal kolannaiyarukku jeyalalitha kattiveddval. nalla porrutham, anne porutham. keelaparkarthil irruka venndiyan--paithyakara hospital--illankaiyul ooruvan annukum cherthu pudavai kattinal vegu joor. badda choor.tamil makkale ennimalum CAREFUL. EVANNKALAI ELECTION S THROW THEM OUT. NAYAVANJAKA KOOTAM.
மாணவர்களின் போராட்டத்தை கூட நசுக்கிய கருணாநிதி , தன் ஆட்சி பறிபோக போகிறதே, அய்யகோ என் செய்வேன் என் பேரப்பிள்ளைகளுக்கு கொள்ளை அடித்து சேர்ப்பதற்குள், இவனுங்க விடமாட்டானுங்க போலருக்கே என புலம்புகிறார்,
அன்புடன் ..
கே.ஆர்.பி.செந்தில்
"கோமாளி கருணாநிதி" புடவை கட்டத் தொடங்கி 40 ஆண்டுகள் ஆகின்றன.
1969-ல் இந்திராவிடம் மண்டியிட்ட உடனே,வேட்டி,கோவணத்தை உதறி,சேலை உடுத்திக்கொண்டார்.
Eena Peravi Karunanithi
Best thing Karunanodhi should do is to threaten that he will immolate himslef along with Ram doss, vaiko and Thiruma.
Sonia, please forgive the death of RAjiv and save the tamils there.
இந்த ஆள இன்னும் 'கலைஞர்'னு அழைக்கனுமா? கயவன் கருணானிதி என்பதே பொருத்தமாக இருக்கும். அதேவேளை ஜெயலலிதாவை 'வப்பாட்டி' ஜெயலலிதா என்று இணையத்தில் விளிக்க வேண்டும்.
அது போல, 'கோமாளி' கோபால்சாமி, 'அரசியல் வேசி' ராமதாஸ் போன்ற அடை மொழிகளை பயன்படுத்த வேண்டும்.
இந்த பொறம்போக்கு நாய்களை கட்டாயம் தோலுரிக்க வேண்டும். அதை இணையத்தில் இருந்தேனும் தொடங்குவோம். சோமாறி, கொட்டைதாங்கிகளுக்கும் ஆப்படித்து அடக்க வேண்டும்.
-----------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'09)
well said boys
but there will be no response frm state and central
the main think to be done is burn out karunaidhi and jayalalitha
then there will be no prb for tamilnadu in the future
en inam alivathu kandu nenju porukuthilaiyeh valamei tharaiyoh
makkal sakthi valka
kalainarku pidithvarkal pera pillai!
kalainarku pidikathavar velu pillai!
kalainar ku pidithathu tamilan ponam!
kalainar serthathu tamilan panam!
kalainarku pidithathu avar tham kudumbam!
kalainarku pidikathathu tamil kudumbam!
Recently, JJ made a statement: "When there is a war, definitely there would be some damages/disturbances to general public's life. This has to be tolerated".
Whereas, MK has never made such statement like this. Due to certain government rules and norms, he is unable to comeout of this political compulsion.
In general, for SriLankan Tamils, MK is far better than JJ.
If JJ was the current CM, none of us can speak and write openly like this . Please try to understand this.
Also, i see many readers here, have mentioned that MK is not strongly condemning central government for political gain for his family members. If this is the case, can we find one single politician in the state who is not gaining from the politics.
தயவு செய்து கலைஞரை அவமதிப்பதாக நினைத்து புடவையையும், புடவை கட்டும் பெண் இனத்தையும் அவமதிக்காதீர்கள். அவருடைய அரசியல் களத்தில் அவருடைய நிலையை விமர்சிக்க வேறு வார்த்தைகளை தேடலாம். புடவை பெண்களின் மானத்தை காப்பது. அதை இழிவு செய்ய வேண்டாமே? புடவைகட்டும் மாந்தர் கோழைகளாக பதுங்கியிருந்த காலங்கள் எல்லாம் மலையேறிப் போய்விட்டது, களத்தில் போராளிகளாகவும், சமூகத்தில் சாதனையாளர்களாகவும் இப்போது பெண்களின் நிலை மேம்பட்டிருக்கும் போது நீங்கள் புடவையை உதாரணப்படுத்துவது தவறு. தேச மாதாவுக்கும் பெற்ற தாய்க்கும் போர்த்தும் சேலையை இவ்வளவு மட்டமாக மதிப்பிடக்கூடாது .... :(
அன்புடன்
சுவாதி.
ஸ்வாதியின் கருத்துக்கள் உண்மையே. என்னை கேட்டால் தமிழ் வார்த்தைகளே வேண்டாம்.
ஸ்வாதி அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன்.
சேலையை அல்லது பெண்களை கேவலப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கூறி இருக்க மாட்டீர்கள் கலைஞர் மீதுள்ள கோபத்தில் அவசரப்பட்டு இவ்வாறு கூறி விட்டீர்கள் என்று நம்புகிறேன்.
அடுத்த முறை கவனமாக இருங்கள். இதை வெளியிட வேண்டிய அவசியமில்லை.
உலக தமிழ் தலைவனின் நிலை :
1. எதிர் கட்சி யா இருக்கும் போது : போராட்டம், பொது கூட்டம், உண்ணா விரதம் எல்லாம்
2. ஆளுங் கட்சி யா இருக்கும் போது : வெறும் அறிக்கை, தீர்மானம் ... எல்லாம் காகிதத்தில் மட்டுமே. இவர் எண்ணம் எல்லாம் ஆட்சி, பதவி, பணம், குடும்பம், சொத்து மட்டுமே....
3. இவர் மிக பெரிய நடிகர் .... ராஜதந்திரி ...
4. இவருக்கு இப்போதைய பட்டம் : தமிழின துரோகி .....
புரட்சி தலைவி நிலை ; தொழில் செய்ய நல்ல இடம் தமிழ் நாடு. வந்தமா ... சம்பதிச்சம ... எம். ஜி.ர படத்த தேர்தல் முன்னாடி காமிச்சி ஒட்டு வங்குனமா ... அவ்ளோ தான். இவருக்கு தமிழர் பத்தி கொஞ்சம் கூட எள் அளவும் எண்ணம் இல்லை. மேல் தட்டு மகாராணிக்கு மக்கள் கஷ்டம் எப்படி புரியும் ?.
அன்னை சோனியா : கணவனை கொன்றதுக்கு ஒரு இனத்தையே அழிக்கிறார் இவர் என எல்லோரும் சொல்வதற்கு ஏற்ப இந்திய உதவி செய்கிறது இலங்கைக்கு ....
காங்கிரஸ்காரர்கள் நிலை : இவர்கள் தமிழன் தனா இல்லை வேற்று நாட்டவரா இல்லை வேற்று மாநிலத்தை சேர்ந்தவரா ? கொஞ்சம் கூட உணர்ச்சி இல்லாமல் .. வெறும் பதவி காக எல்ல வற்றையும் விட்டு கொடுத்து .... ச்ச .... இதில் மேடை பேச்சு வேறு ... மக்களை திசை திருப்ப பேரணி வேறு ... காந்தி யுன் காங்கிரஸ் இவ்வளவு கேவல படுத்து .... பதவி மட்டுமா இவர்கள் குறி...
தமிழன் வெக்க பட வேண்டிய நிலை , கேவல பட வேண்டிய நிலை .......
முட்டாள் தமிழன் ...செம்பரி ஆடாய் வெறும் சோற்றுக்கும், சாராயத்திற்கும் கொடி பிடிக்கும் வரை .....நம் தலையை செருப்பாய் யார் வேணுமானாலும் அணிவார்கள் .... அவர்களை சொல்லி குத்தமில்லை ....
சன் டிவி குழுமமோ தொழில் பாதித்து விட கூடாது னு கலைஞர் காலை பிடித்து விட்டார்கள். ரகசிய உடன்பாடாம் "கலைஞர் பற்றி அதிகம் டச் பண்ணாமல் செய்தி வெளியுட. இதில் வேறு ஸ்டாலின் அவர்களை குளிர்ச்சி செய்ய தெனம் ஒரு செய்தி. ஈழ செய்தி வெளியுட்டால் கலைஞர் பதவி ஆட்சிக்கு ஆபத்து.....அதனால் அப்படியே "முழு பூசணி காயை சோற்றில் மறைகிறது சன் டிவி, கலைஞர் டிவி.
ஜெயா டிவி பற்றி சொல்லவே வேண்டாம். மாமி வீட்டு தயிர் சாதம் சமைப்பது எப்படி?. பருப்பு .. நெய் சோறு ஜீரணம் ஆக பாட்டு பாடுவது எப்படி?. அறை குறை யாக அம்மணமா ஆடுவது எப்படி? ..... இது போன்ற விஷயங்கள் தான் ...
முட்டாள் தமிழன்
Post a Comment