எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Thursday, 5 February 2009

தமிழினத்துரோகி யார்? எதிரி யார்?

அண்மைக்காலமாக நம் சொந்தங்கள் ஈழ மண்ணிலே சொல்லொன்னா துன்பத்துக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்திலே அவற்றை காணச்சகியாமலும் அதை எதிர்த்து ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்யமுடியாத கையறு நிலையிலும் என்னைப்போன்றவர்கள் சற்று வன்மையாகவும் கரடு முரடாகவும் பல பதிவுகளை எழுதி வருகிறோம். இத்தகைய கட்டுரைகளில் அதிகம் விமர்சிக்கப்படுபவராக கருணாநிதி இருக்கிறார். ஆனால் பல நண்பர்கள் இந்தவிடயத்தில் கருணாநிதியை இந்த அளவுக்கு விமர்சிப்பது அர்த்தமற்றது என்றும் அவர் தன்னால் இயன்றதை செய்துள்ளார் என்று வக்காலத்து வாங்குகிறார்கள். அதுவும் அவர் ஆட்சியில் இருப்பதுதான் ஈழத்தமிழர்களுக்கு நாம் ஏதாவது ஆக்கப்பூர்வமாக செய்ய உதவும் என்று வாதிடுகிறார்கள். ஈழத்தந்தை செல்வா அவர்களின் புதல்வர் கூட கருணாநிதியின் நிலையை ஆதரித்து அறிக்கை வெளியிட்டதாக செய்தி கூட வெளிவந்தது. ஆனால் இதில் எந்த அளவுக்கு நியாமம் இருக்கிறது என்பதை இவர்களும் மற்ற தமிழின உணர்வாளர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். கருணாநிதி மேலான எங்கள் கோபத்தில் உள்ள நியாத்தை நண்பர்கள் புரிந்துகொள்ளவேண்டும். நான் எப்போதுமே கருணாநிதியை தமிழினத்தலைவர் என்று ஏற்றுக்கொண்டவன் இல்லை. தமிழ் தமிழினம் என்பவற்றை தன் அரசியல் சித்து வேலைகளுக்காக மட்டுமே பயன்படுத்தும் அவரது சாணக்கியத்தனத்தைக் என்னால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. அப்படிப்பட்ட நானே ஈழத்தமிழர் விடயத்தில் அண்மைக்காலங்களில் அவர் காட்டிய வேகத்தைப்பார்த்து அசந்து போனேன். இந்த முறை கண்டிப்பாக ஆக்கப்பூர்வமாக ஏதாவது நேரும் என்று எல்லோரையும் போல் நானும் ஆர்வமாக அவரது வாயையே பார்த்திருந்தேன். ஆனால் அவர் யார் என்பதை அவர் படிப்படியாக காட்டிவிட்டார். முதலில் நிவாரணப்பொருட்கள் அனுப்பலாம் என்றார். கடந்த ஒரு வருட காலமாக தாங்கள் சேகரித்தப் பொருட்களை அனுப்பவேண்டும் என்று பழ.நெடுமாறன் போன்றோர்கள் மன்றாடியபோதெல்லாம் வாளாயிருந்தவர் இப்போது அனுப்பலாம் என்பதில் இருந்த சூழ்ச்சியை யாரும் அறியவில்லை. அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டினார். எல்லோரும் ராசினாமா செய்வோம் என்று முழங்கினார். என்னமோ இவர்தான் மக்களவை சபாநாயகர் போல எல்லா எம்பிக்களிடமும் ராசினாமா கடிதம் வாங்கினார். அப்புறம் கெடுவை நிர்ணயித்தார். அப்புறம் அவரே அதை பல முறை நீட்டித்தார். அப்புறம் டெல்லிக்குச் சென்று மனு கொடுத்தார். பிரணாப் கொழும்பு செலவார் என்று போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்துவார் என்றார். இவரது நாடகத்துக்கு டெல்லி அசைந்து கொடுக்கவில்லை என்பதை பார்த்தவுடன் கண்ணீர் தீர்மானம் நிறைவேற்றினார். இப்படி இவர் தொடர்ச்சியாக ஆடிய நாடகங்களால் ஈழத்தமிழர்களுக்கு ஒரு இம்மியளவாவது நன்மை ஏற்ப்பட்டதா என்று நண்பர்கள் சிந்திக்கவேண்டும். இவரது திட்டமெல்லாம் ஒரு வேளை ஈழ மக்களுக்கு தமிழக மக்களின் உதவி அல்லது ஆதரவால் ஏதேனும் நன்மை விளைந்தால் அதனால் உண்டாகும் நல்லப் பெயர் சிந்தாமல் சிதறாமல் தனக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்பதுதான். அதற்கு தன்னை முன்னிறுத்திக் கொள்வதற்கான முயற்சிதான் இவர்காட்டிய படமெல்லாம். இவர்கள் முயற்சியால்தான் பிரணாப் இலங்கை சென்றார் என்று இதுவரை ஒரு இடத்தில் கூட மத்திய அரசு குறிப்பிடவில்லை. மாறாக தமிழகத்தின் கோரிக்கைக்கும் பிரணாப்பின் வருகைக்கும் எந்த தொடர்புமில்லை என்று கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்தது. அதே போல் பிரணாப்பும் நமது கோரிக்கை குறித்து பேசியதாக எதுவும் குறிப்பிடவில்லை. மாறாக போரால் சீரழிந்த பகுதிகளின் மறுசீரமைக்க இந்தியா உதவும் என்று சொன்னார். அதாவது ஆயுதங்களை கொடுத்து தமிழினத்தை அழித்ததோடு நில்லாமல் அவர்களுக்கு நிரந்தர சமாதி கட்ட உதவுவோம் என்றார். இதற்கெல்லாம் திமுக அரசு கட்டிய சப்பைகட்டு என்ன தெரியுமா? அண்டை நாட்டு விடயங்களில் ஒரு அளவுக்கு மேல் இந்தியா தலையிட முடியாதாம். என்ன ஒரு கண்டு பிடிப்பு! இது ஏன் இவர்களுக்கு இத்தனை நாள் தெரியவில்லை. இன்று மட்டும் இந்த ஞானோதயம் எங்கிருந்து வந்தது. இதுதான் கருணாநிதி ஆட்சியில் இருந்து தமிழர்களுக்காக சாதித்தது. இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல் இன்னொரு பெரிய ஞானோதயம் இப்போது கருணாநிதிக்கு வந்துள்ளது. அதாவது விடுதலைப்புலிகள் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளாம். அதனால் அவர்களை திமுக ஆதரிக்கவில்லையாம். ஆனால் பிரிகேடியர் தமிழ்ச்செல்வம் அவர்கள் மறைந்தபோது அவருக்காக கவிதை பாடியபோது அவர் ஒரு போராளி என்பது தெரியாமல் போயிற்றா? தமிழனுக்காக என் உயிரையும் அரசையும் இழக்கத்தயார் என்று முழங்கிய கருணாநிதி என்று எதற்காக யாரோ தம் ஆட்சியை கவிழ்க்க சதி செய்கிறார்கள் என்று புலம்புவது ஏன்? யாரை ஏமாற்ற நீங்கள் முன்னர் அவ்வாறு முழங்கினீர்? மேலும் ஈழத்தமிழர்கள் சுயாட்சி உரிமை பெறும் அரசியல் தீர்வுக்காக திமுக பாடுபடுமாம். அதாவது தனி ஈழக் கோரிக்கையை இவர்கள் ஆதரிக்கவில்லை என்பதைதான் மறைமுகமாக இவ்வாறு தெரிவித்திருக்கிறார். எல்லாம் தெரிந்த ஏகாம்பரமான கருணாநிதிக்கு ஈழத்தின் வரலாறு தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. ஈழத்தந்தை செல்வா பல பல ஆண்டு காலமாக சுயாட்சி உரிமைக்கும் பெடரல் உரிமைக்கும் அகிம்சை வழியில் போராடிப் பார்த்துவிட்டு வேறு வழியில்லாமல் வைத்ததுதான் தனி ஈழ கோரிக்கை. அகிம்சை போராட்டங்களை வன்முறையால் அழித்த சிங்கள இனவாத அரசை எதிர்க்க வேறு வழியினறி ஆயுதமேந்தி போராடுகிறார்கள் விடுதலைப்புலிகள். ஆகவே தனி ஈழம் என்பது தந்தை செல்வாவின் கோரிக்கை. விடுதலைப்புலிகளுடையது மட்டுமல்ல. இப்படி காலாவதியாகி போய்விட்ட கோரிக்கையை யாருக்காக கருணாநிதி முன்வைக்கிறார் என்று கருணாநிதியை ஆதரிக்கும் தியாகி செல்வாவின் மகன் விளக்கவேண்டும். இவர்களின் புண்ணாக்கு கோரிக்கைகளுக்காக பொது மக்களை திரட்டி போராடப் போகிறார்களாம். அதற்காக ஒரு இயக்கத்தையும் ஆரம்பித்து இருக்கிறார்கள். அதாவது போரட்டத்தில் குதித்த பிள்ளைகளை விடுதியை அடைத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டு இவர்கள் போராடப்போகிறார்களாம். அதே போல இந்திய அரசால் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது என்று இவர்களே சொல்லி விட்டு இப்பொது யாரை எதிர்த்து போராடப்போகிறார்கள். என்ன ஒரு நாடகம் பாருங்கள். திமுக ஆட்சி போய்விட்டால் இப்போதிருக்கிற நிலைகூட கிடைக்காது என்ற சொத்தை வாதத்தை வைத்து பூச்சாண்டி காட்டும் நண்பர்களே! ஒரு விடயத்தை சிந்தித்து பாருங்கள் ! செயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் என்ன பெரிய வித்தியாசம். செயலலிதா எதிப்பை வெளிப்படையாக காட்டுவார். ஆனால் கருணாநிதி நம்பவைத்து கழுத்தறுப்பார். ஆக இருவராலும் நமக்கு பயனில்லை. மேலும் நமது போராட்டங்களாலும் அரசின் ஆதரவாலும் மத்திய அரசின் நிலையில் இது வரையில் ஒரு மில்லிமீட்டர் அளவாவது மாற்றம் இருக்கிறதா? இந்நிலையில் நம் போராட்டஙகளை அவர்கள் அனுமதித்து என்ன பயன்? நம் போராட்டங்களை காட்டி கூடுதல் தொகுதி பெறத்தான் கருணாநிதிக்கு அது உதவும். நாங்கள் கையெடுத்து கும்பிட்டு கருணாநிதியை மன்றாடி கேட்டுக்கொள்வது இதுதான். எங்களுக்காக உத்தமர்களாகிய நீங்கள் ஆட்சியை எல்லாம் இழக்கவேண்டாம். பேசாமல் வாயையும் ……த்தையும் மூடிக்கொண்டு இருங்கள். இத்தாலி அம்மையார் சோனியாவுடன் சம்பந்தம் பேசி பேரப்பிள்ளைகளுக்கு மேலும் எப்படி சொத்து சேர்க்கலாம் என்று யோசியுங்கள். அல்லது தமிழினத்தின் எதிரிகளான தமிழகத்தின் சாபக்கேடுகளான செயலலிதா, சுப்பிரமணியம்சாமி, தங்கபாலு இவர்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள். சிங்கள இனவெறியர்களோடு சேர்த்து இவர்களையும் எதிர்த்துதான் நாங்கள் போராடுகிறோம். அவர்களோடு உங்களையும் சேர்த்துக்கொள்கிறோம். இவர்கள் எங்கள் இனத்தின் எதிரி என்று எங்களுக்கு தெள்ளத்தெளிவாகத் தெரியும். அதனால் இவர்களால் எங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறைவுதான். ஆனால் எங்கள் கூடாரத்தில் இருந்து கொண்டே நீங்கள் செய்யும் துரோகத்தால் எங்களுக்கு ஏற்படும் பாதிப்புதான் அதிகம். நீங்கள் நடத்தும் நாடகத்தால், நீங்கள் எடுக்கும் ஒன்றுக்கொன்று முரண்பாடான முடிவுகளால் உண்மை உணர்வாளர்களின் போராட்டங்களும் கோரிக்கைகளும் நீர்த்துப்போகின்றன. உங்களின் இத்தகைய நடவடிக்கைகள் நம்முடைய உள்ளப் பூர்வமான ஆதரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற ஈழத்து உறவுகளை சோர்வடைய செய்கிறது. இந்த கோரிக்கை உங்களுக்கு மட்டுமல்ல எல்லா தமிழக அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். உங்களின் கோமாளித்தனத்தினால் பன்னாட்டுச் சமுதாயமே ஒரு மானமிகு இனத்தை கேவலமாகப் பார்க்கிறது. நண்பர்களே எதிரிகளைகாட்டிலும் துரோகிகள் ஆபத்தானவர்கள்!

15 comments:

தேசிய தலைவர் said...

புலம் பெயர் வாழ் தேசங்களில் உள்ள எம் இரத்த உறவுகளே. எமது உறவுடன் இணைந்த தாழ்மையான வணக்கம்.

உங்களின் தாய் மண்ணில் உங்கள் உறவுகளாகிய நாங்கள் அனுபவிக்கும் துயரங்களையும் அழிவுகளையும் இழப்புக்களையும் எங்களுக்கு மேலாக உணர்ந்து கொண்ட நீங்கள் முன்னெடுக்கின்ற தாயகத்தின் தேசிய விடுதலைக்கான எழுச்சி செயற்பாடுகள் அனைத்தையும் அவதானித்து எங்களின் இதய குமுறல்களை எப்படி உங்களோடு பகிர்ந்து கொள்வதென்று புரியாத சூழ்நிலையில் வாய்மூடி மௌனிகளாக எங்கள் இதயம் வெடிக்கின்றது.

நீங்கள் வாழும் தேசத்தில் உங்கள் உள்ளக் குமுறல்களை துணிந்து வெளிப்படுத்தக்கூடிய சூழ்நிலையில் இருக்கின்றீர்கள். நாங்களோ இத் தாய் மண்ணில் வாழ்ந்துகொண்டு எங்கள் தழிழ் என்ற இனிய மூச்சை சுவாசிக்க முடியாதவர்களாக தவிக்கின்றோம்.

எமது தேசிய விடுதலை போராட்டத்தின் வரலாற்றையும் தேசிய தலைவரின் வழிகாட்டல்களையும் தமிழர்களாகிய நாம் அனைவரும் உணர்வோம்.

இவ்வாறான கால கட்டத்தில் எமது வடக்கு தாயகமாகிய யாழ்மண் இணைப்பின்றி துண்டாடப்பட்டதுடன், கிழக்கு தாயகம் மட்டுநகர் மண்ணும் தேசத் துரோகிகளின் வழிகாட்டல்களுடன் எமது தாயகத்தின் தனித்துவம் தடம் புரண்டு துண்டாடப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் விடுதலை பாதையின் வன்னிக் களமானது தனிமைப்படுத்தப்பட்டு இரத்த களமாக உருமாறியுள்ளதுடன், அங்கு எமது உறவுகளின் உயிர் அழிவுகளும் அளவிட முடியாத துயரத்தில் அனைவரையும் ஆழ்த்தியுள்ளது.

எமது தேசிய தலைவரும் அவருடன் இணைந்த எமது இரத்த உறவுகள் மீதும் சிறிலங்கா அரசு தங்களால் முடியாத செயற்பாட்டை மேற்கொள்வதற்காக இந்திய அரசுடனும் ஏனைய வல்லரசு நாடுகளுடன் இணைந்து வேறோர் அயல் நாட்டை கைப்பற்றுவதுபோல எமது இனத்தையும், தேசத்தையும் அழித்து விட்டு வெற்றி விழா கொண்டாடுகின்றார்கள்.

திரும்பி வாருங்கள்…

இவ்வாறான சூழ் நிலையில் எமது தேசிய விடுதலைக்கு தளமாகவும், போர் முனையாகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வன்னி போர்க்களத்தில் உள்ளவர்கள் எமது சகோதர இரத்த உறவுகள்தான். அவர்கள் மறு அவதாரங்கள் எடுப்பதற்கு கடவுளோ, மந்திரவாதிகளோ இல்லை.

அங்கு தேவைப்படுவதெல்லாம் ஆட்பலத்துடன், இணைந்த மனிதவலு தான். இவ்வலுப்பலத்தினை எமது தேசிய தலைவரின் இலக்கோடு இணைத்து கொள்வதற்கும், எம் உறவுகளை உயிர் ஊட்டுவதற்கும், புலம் பெயர்வாழ் தமிழ் மக்களாகிய நீங்கள் தேச விடுதலைக்கான அமைப்புக்கள், புத்திஜீவிகள், அரசியல்வாதிகள், கல்விமான்கள், இளைஞர், யுவதிகள் ஏனையோர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து சாதூரியமான திட்டங்களை மேற்கொள்வதுடன்,அழிந்து விட்ட எமது தாய் மண்ணின் சமூக, பொருளாதார, கல்வி, கலை, கலாச்சார, விழுமியங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், எமது தேசவிடுதலையை வென்றெடுப்பதற்கும் அனைவரும் விரைந்து வாரீர்! என்று அறைகூவல் விடுக்கின்றோம்.
ஓடுகாலி கூட்டமொன்று பயந்தோடி அன்று,
விதவிதமாய் வலைப்பூக்களில் கவிதையெழுதுது இன்று
திரும்பிவர கூப்பிட்டா கதய சொல்லுது நன்று.,

savuccu said...

*** விடுதலைப்புலிகள் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளாம். அதனால் அவர்களை திமுக ஆதரிக்கவில்லையாம். ஆனால் பிரிகேடியர் தமிழ்ச்செல்வம் அவர்கள் மறைந்தபோது அவருக்காக கவிதை பாடியபோது அவர் ஒரு போராளி என்பது தெரியாமல் போயிற்றா? ***

நேரத்துக்கு ஒரு பேச்சாகப் பேசி ஏமாற்றுவதே பிழைப்பாகி விட்டது!

***** ஈழத்தமிழர்கள் சுயாட்சி உரிமை பெறும் அரசியல் தீர்வுக்காக திமுக பாடுபடுமாம். அதாவது தனி ஈழக் கோரிக்கையை இவர்கள் ஆதரிக்கவில்லை என்பதைதான் மறைமுகமாக இவ்வாறு தெரிவித்திருக்கிறார். எல்லாம் தெரிந்த ஏகாம்பரமான கருணாநிதிக்கு ஈழத்தின் வரலாறு தெரியாமலிருக்க வாய்ப்பில்லை *****

முதிய அகவையில் இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் தன் குடும்பங்களுக்காக எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொள்ளை அடித்தாக வேண்டும்! வரலாற்றைப் பற்றி எல்லாம் நினைப்பதாவது? மண்ணாவது?

*** உங்களின் கோமாளித்தனத்தினால் பன்னாட்டுச் சமுதாயமே ஒரு மானமிகு இனத்தை கேவலமாகப் பார்க்கிறது. ***

இப்போதைய கவலையெல்லாம் மகன், மகள், பேரன் , பேத்தி, கொள்ளு பேரன், கொள்ளு பேத்தி, பதவி, வருமானம், சொத்து... இன்னோரன்னவே!

Anonymous said...

கருணாநிதி அபார சாமர்த்தியசாலி. ஆனால் அவரின் திறமை அதிகம் மக்களுக்கு பயன்பட்டது இல்லை. அதிகாரம், பணம், அடியாள் போன்றவற்றையே பிரதான நோக்கமாக கொண்டு நீண்ட காலம் தமிழ் சமூகத்தை ஏமாற்றி வந்தவர் . உண்மை மற்றும் மக்களின் நன்மதிப்பு ஆகியவற்றை விட தந்திரம், நாடகம், திரைமறைவு தில்லுமுல்லுகள் போன்றவற்றை அதிகம் நம்பியவர். அவருடைய எதிர்மறையான திறமைகளுக்கு ராஜதந்திரம், சாணக்கியம் என்று படித்தவர்களே முலாம் பூசினார்கள் (தெரிந்தோ தெரியாமலோ?).

இன்றைய சூழ்நிலையில் அவருடைய நீண்ட கால சாயம் வெளுத்து வருகிறது. இனி அவர் என்ன செய்தாலும் யாரும் நம்ப தயார் இல்லை. இளைய தலைமுறையினர் இப்போது அவரை நன்கு புரிந்துவைதுள்ளனர்போல் தெரிகிறது. பாவம். அவரை யாரும் திட்டவேண்டாம். காலவெள்ளத்தில் கரை ஒதுங்கும் வேலை அவருக்கு வந்து விட்டது. நல்ல தொண்டர்கள் தலைவனுக்கு அறிவுரை சொல்லட்டும்.

தற்போது உள்ள அரசியல் அமைப்பில் சில எல்லைகள் இருக்கலாம் . ஆனால் நமது உணர்வை உரத்து எடுத்து சொல்ல எந்த தடையும் இல்லை. அவ்வாறு சொல்வதன் மூலம் உலகின் கவனம் நம் மீது திரும்பும். தமிழர்கள் கிள்ளு கீரைகள் அல்ல என்பதை அனைத்துலக சமூகம் உணரும்.

சத்தியமும், நேர்மையும் கொண்ட தலைவன் நமக்கு இனிவரும் காலத்தில் கிடைக்கட்டும். தொலை நோக்கு பார்வையும், உலக அறிவும் கொண்ட புதிய தலைமை உருவாகட்டும். தங்களின் பதிவுக்கு நன்றி.

Anonymous said...

Totally agreed to the article on Karunanidhi. He is selfish to the core which he proved many times. The best way to deal with him is to ignore him.

ஜோதிபாரதி said...

சரியான ஆதங்கம், பதிவு!

suresh said...

ivar solvadhu athanayum poi. ithania nal indha prachani irukku idhuvaraikum yarum atha pathi vai thorakalai. ippa vandhu tamil eelam chumma solranga. tamilnatla bus koluthuradula enna sadhika mudiyum. ivvalvu pesravanga srilnak poi sandai poda vendiyathu thane athe kalaignar seyyale ivan seyyal avar avaral mudithai seyya vendiyathu than

Anonymous said...

Your 100% correct; I salute to your gust and confident

Thanks
Unkal Eelaththamil Sakotharan

Anonymous said...

well done!

suresh said...

mika arumai,karunanathi sanakiyan alla,avar oru criminal enpathai ,thelivaka,sollivitterkal.melum thodara valthukkal.

S said...

இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும்போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. முத்துக்குமாரின் மரணத்தைத் தொடர்ந்து தீக்குளிப்புகளும் தொடர்கின்றன. பிரச்னையை தீவிரமாகியிருக்கும் நேரத்தில் ரஜினி ரசிகர் மன்றங்களும் போராட்டங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்திருக்கினறன. திருப்பூரைச் சேர்நத்வர் ரஜினி சுகுமார். தாராபுரத்தில் ஒரு செங்கல் சூளையில் வேலை பார்த்து வருபவர். கிடந்த புதன் கிழமை வேலைக்கு வந்த சுகுமார் இலங்கைப் பிரச்னை பற்றி நண்பர்களுடன் வருத்தத்துடன் பேசிக்கொண்டிருந்தாராம். திடீரென்று மண்ணென்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க நினைத்தாராம். கூடியிருந்த நண்பர்கள் சுகுமாரின் செயலை தடுத்து அவரை காப்பாற்றியதோடு காவ்ல்நிலையத்திலும் ஒப்படைத்திருக்கிறார்கள். சுகுமாரின் மேல் வழக்கு பதிவு செய்த காவல்துறையும் மேற்கொண்டு விசாரித்து அன்று மாலையே வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் இரண்டு. 1. சுகுமார் மீது வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. தீக்குளித்துவிடுவதாக மிரட்டியதாக வழக்கு. 2. நடந்த சம்பவம் பற்றி பத்திரிக்கைகளில் இதுவரை செய்தி வரவில்லை. உள்ளுர் செய்திகளில் கூட முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

Anonymous said...

சன் டிவி குழுமமோ தொழில் பாதித்து விட கூடாது னு கலைஞர் காலை பிடித்து விட்டார்கள். ரகசிய உடன்பாடாம் "கலைஞர் பற்றி அதிகம் டச் பண்ணாமல் செய்தி வெளியுட. இதில் வேறு ஸ்டாலின் அவர்களை குளிர்ச்சி செய்ய தெனம் ஒரு செய்தி.

ஈழ செய்தி வெளியுட்டால் கலைஞர் பதவி ஆட்சிக்கு ஆபத்து... அதனால் அப்படியே "முழு பூசணி காயை சோற்றில் மறைகிறது சன் டிவி, கலைஞர் டிவி.

ஜெயா டிவி பற்றி சொல்லவே வேண்டாம்.
மாமி வீட்டு தயிர் சாதம் சமைப்பது எப்படி?.
பருப்பு நெய் சோறு ஜீரணம் ஆக பாட்டு பாடுவது எப்படி?.

அறை குறை யாக அம்மணமா ஆடுவது எப்படி? ....

இது போன்ற விஷயங்கள் தான் ...

Anonymous said...

yedhu better?

stalin pathina newsa? illai, paruppu sathamum ammana attamuma?

Anonymous said...

aresiyelil irupeverghel eppoluthum
vayil teenwaitu,nam kathil poovaitu,siil waitu,ameitiya tii wacciduwangge,ithu awerghelukku kai vanthe kalai

Anonymous said...

aresiyelil irupeverghel eppoluthum
vayil teenwaitu,nam kathil poovaitu,siil waitu,ameitiya tii wacciduwangge,ithu awerghelukku kai vanthe kalai

Anonymous said...

very simple,senthamil naddin
tamilinetturoogi,100% paccei tamilenthan