Friday, 27 February 2009
தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே!
அன்புத்தமிழ் நெஞ்சங்களே!
நம்முடைய சொந்த தொப்புள் கொடி உறவுகள் ஒரு சில மைல் தூரத்தில் தினம் தினம் செத்துமடிந்து கொண்டிருக்கிறார்கள். நமது சொந்த இனம் பூண்டோடு சிரீலங்கா அரசால் திட்டமிட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் நாமோ அந்த நாட்டுக்கு இறையாண்மையுள்ள நாடு என்ற பட்டத்தை அனுதினம் வழங்கி பெருமை படுத்திக்கொண்டிருக்கிறோம். நம்மில் பலர் அங்கு நடப்பது ஒரு திட்டமிட்ட இனஅழிப்பு என்பதை அறியாமல் சிரீலங்கா அரசுக்கு வால் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். நாம் அரசியல் செய்ய பல களங்கள் இருந்தும் கொஞ்சம் கூட பிரஞ்ஞையே இல்லாமல் தினம் செத்து மடிந்துகொண்டிருக்கிற நமது சொந்தங்களின் பிரேதங்களின் மீது அரசியல் செய்துகொண்டிருக்கிறோம். இன்னும் சிலர் அவர்களுக்கு ஆதரவு தருவதே இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்பதுபோல் ஒருமாயயை உருவாக்குகிறார்கள்.
இதோ நம் ஈழ சகோதரனின் கூக்குரலை இந்த பாட்டில் கேளுங்கள். தான் வாழ்வை இழந்து நின்றபோதும் தான் வளர்த்த குருவியின் நாயின் மீது அவர்களுக்கு இருக்கும் வாஞ்சை கூட இந்த சகோதர சகோதரிகளின் மேல் நமக்கு இல்லையே! ஐயகோ பேய் மனது படைத்தோரே நீர் மனதிறங்க மாட்டீரோ!
தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே!
தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே!
வெடிவிழுந்து எரிந்த பனை
கரை உடைந்து காயந்த குடம்
கூரை சரிந்த எமது இல்லம்
குருதி வடிந்த சிறு முற்றம்
இரவை கிழித்த பெண்ணின் கதறல்
ரத்தம் வடிந்த குழந்தை பொம்மை
என் தேசம் பதுங்கு குழியின் உள்ளே
புதைய சம்மதமா?
தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே!
விளக்கேந்திய மாடமெல்லாம் விழுந்தே போனதோ!
ஊஞ்சலாடிய முயலை
நீந்திப்பழகிய வாவி எல்லை
என் தோப்பில் அடைந்த பூங்குருவிகள் எங்கு போனதோ
என் தோட்டத்தில் ஈன்ற தாய் பூனை என்ன ஆனதோ
முற்றம் தெளித்திட விடியல் வருமோ!
யுத்த யாமத்தில் வாழ்வு முடியுமோ!
தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே!
மக்கள் தொலைக்காட்சியில் தினமும் ஒளிபரப்பாகும் ஈழம் - நேற்றும் இன்றும் தொடரின் தலைப்பு பாடல் இது. நன்றிகள் : ஒரே தமிழ் தொலைக்காட்சியாம் - மக்கள் தொலைக்காட்சிக்கும் - பாடலை உணர்ச்சி பெருக்கோடு பாடிய கலைஞர்களுக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
தமிழ் நாட்டில் இன்று தமிழின உணர்வைத் தூண்டிய பெரும்பங்கு “மக்கள் தொலைக்காட்சிக்கும்” “தமிழ் ஓசை” நாளேட்டிற்கும் உண்டு.
அரைகுறை ஆடையுடன் காமத்தையும் போதையும் கலந்து வழங்கி தமிழனை சுயநினைவு இழக்க வைக்கும் தமிழ் ஊடகங்களுக்கு நடுவில் மக்கள் தொலைக்காட்சியின் பங்கு மக்கத்தானது. அவர்களின் பணி சிறக்க தமிழர்கள் அனைவரும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
வருகைக்கு நன்றி கரிகாலன்!
ஆனால் நம் மக்களுக்கு மக்கள் தொலைக்காட்சியை எல்லாம் பார்க்க நேரம் கிடைப்பதில்லை.
நான் எங்கெல்லாம் தமிழனை பார்க்க நேர்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் கண்களையும் உற்று, உற்று பார்பேன் "யார் கண்ணிலாவது தமிழன் என்ற உணர்வு இருக்கிறதா என்று". நிறைய முறை தோல்வி அடைத்தது தான் மிச்சம். தெரிவதெல்லாம் தான், தான் குடும்பம் என்ற சுயநலம் தான்... மிகுந்த வருத்ததிற்கு ஆளானேன் ... என்ன செய்ய... ஒரே நம்பிக்கை உணர்வுள்ளவர்களை பார்த்து ...
முற்றம் தெளித்திட விடியல் வருமோ!
நண்பரே இந்தப் பாட்டை ringtone வடிவில் பெற என்ன செய்ய வேண்டும்
ஆம் செந்தேள்,
விடியல் கண்டிப்பாய் வரும்!நன்றி!
தங்கள் பணி தொடர்க
மு.இளங்கோவன்
புதுச்சேரி
http://muelangovan.blogspot.com/
சத்தியநாராயணன் ஐயா!
உங்கள் மின்னஞ்சல் முகவரியை தெரியப்படுத்தவும். தரவிறக்கம் செய்வதற்கான சுட்டியை உங்களுக்கு தனியாக தெரிவிக்கிறேன்.
நன்றி.
முனைவர் ஐயா!
தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் கோடி. தங்களைப்பொன்ற தமிழ்ச்சான்றோர் என் வலைத்தளத்திற்கு வந்ததை பெருமையாக நினைக்கிறேன்.
நானும் உங்கள் பகுதியில் பிறந்தவன்தான். தற்போது இந்தொனேசியாவில் பணிபுரிகிறேன்.
// ஆம் செந்தேள்,
விடியல் கண்டிப்பாய் வரும்!நன்றி!//
விடியல் வரும் வரை இழப்புகளை அதுவும் குழந்தைகள் இழப்பை ஜிரணிக்கவே முடியவில்லை
Post a Comment