Saturday, 11 April 2009
ஈழம் - கேள்வி பதில் - பாகம்-இரண்டு
ஈழப்பிரச்சினையில் தமிழர்களுக்கு எதிரான நிலையை இந்திய அரசு எடுக்க வேண்டிய காரணமென்ன?
இந்தியா இன்று இத்தகைய நிலைப்பாட்டுக்கு முழுக்காரணம் ஆளும் காங்கிரசு அரசின் தலைவி சோனியாவும் அவரது அரசுக்கு முட்டு கொடுத்து நிற்கும் தமிழக சுயநல அரசியல்வாதிகளும்தான். ராசீவ் காந்திக் கொலையில் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக எண்ணி அவர்களை பழிவாங்கும் பொருட்டு ஒட்டு மொத்த ஈழத் தமிழர்களையும் பழி வாங்கிக்கொண்டிருக்கிறது இந்திய அரசு. தமிழகத்தில் உள்ள ஆறு கோடித்தமிழர்களின் உணர்வையும் புறந்தள்ளிவிட்டு தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக ஒரு தேசத்தையே அகிம்சைக்கு எதிராக திருப்பி விட்டிருக்கிறார் சோனியா காந்தி. அவரது இந்த தவறான முடிவை தட்டிக்கேட்க ஆண்மையுள்ள ஒரு தலைவரும் தமிழக காங்கிரசில் இல்லை. மத்திய காங்கிரசை தாங்கிப்பிடித்திருந்த கருணாநிதியும் இராமதாசும் தத்தம் சுயநலத்துக்காக தமிழக மக்களின் உணர்வுகளை அடகுவைத்துவிட்டார்கள்
ஈழப்பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் கடைமையை செய்யவில்லை என்கிறீர்களா?
கண்டிப்பாக. தங்கள் கடைமை செய்யவில்லை என்பதைவிட தமிழினத்திற்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்துவிட்டார்கள் என்றே கூறலாம். இந்தக்கட்சிகள் ஈழப்பிரச்சினையை தங்கள் ஓட்டுப்பொறுக்கும் தந்திரத்திற்கு ஒரு கருவியாகவே பயன்படுத்த முயல்கின்றன. உண்மையில் தினந்தோறும் ராச பக்சே அரசால் கொல்லப்பட்டு வரும் ஆயிரக்கணக்கான தமிழர்களை காப்பாற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதையுமே இவர்கள் எடுக்கவில்லை. மத்திய அரசிலேயே அங்கம் வகித்துக்கொண்டு தங்களுடைய அரசுக்கே இவர்கள் கருணை மனு போட வேண்டிய அவசியம் என்ன? கட்டளையிட வேண்டியதுதானே? தங்கள் கட்டளையை ஏற்க மறுத்தால் அந்த அரசிலிருந்து வெளியேறுவதுதானே நியாயம்? அதைவிடுத்து தாயே! நாயே! என்று கெஞ்சவேண்டிய அவசியன் என்ன? யாரை ஏமாற்றுவதற்காக மனிதசங்கிலி உண்ணாவிரதம் ராசிநாமா பேரணி இவையெல்லாம்? ஒரு சீக்கியருக்கோ அல்லது மலையாளிகளுக்கோ இந்த நிலை ஏற்பட்டால் அவர்கள் எல்லாம் இப்படித்தான் நடந்துகொள்வார்களா? அவர்கள் வீரர்கள். தங்கள் இனத்தின் நன்மைக்காக தங்கள் பதவியை உயிரையும் துச்சம் என்று நினைப்பர்கள். தமிழக அர்சியல்வாதிகள் எட்டப்பன் பரம்பரையில் பிறந்தவர்கள். தங்களின் பதவி சுகத்துக்காக தமிழர்களின் பிணங்களின் மீது அரசியல் செய்யும் இவர்கள் பிணந்திண்ணி கழுகுகள். இவர்கள் நம்மை ஆள்வதால் நமக்குத்தான் அவமானம்.
விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கம். அதை ஆதரிப்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது இல்லையா?
நாங்கள் விடுதலைப்புலிகளை இந்தியாவில் தடை செய்ததே தவறு என்கிறோம். அந்த இயக்கத்தின் மீதான தடையை நீக்கவேண்டும் என்று எங்கள் அரசிடம் கோரிக்கை வைக்கிறோம். அவர்கள் தரப்பு நியாயத்தை எடுத்துச்சொல்கிறோம். இது எப்படி இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும்? இந்திய அரசு ஒரு தவறை செய்யும் போது அதை தட்டிக்கேட்கும் உரிமை அதன் குடிமக்களுக்கு இல்லையா? வெளிநாட்டில் பிறந்த ஒருவர் பின் வாசல் வழியாகப் புகுந்து ஒரு நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயங்களில் முடிவெடுப்பது இந்திய இறையாண்மைக்கு ஊருவிளைவிக்க கூடியதா? அல்லது இந்த நாட்டின் பூர்வக்குடிகளான நாங்கள் எங்களின் நியாமான எண்ணங்களை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு ஊருவிளைக்கக்கூடியதா? சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
தமிழர்களின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்க சக்திகள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதே இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்பது போன்ற ஒரு மாயயை உருவாக்குகிறார்கள். தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஏற்பட்டிருக்கும் எழுச்சியை நேர்மையான முறையில் எதிர்கொள்ளமுடியாத காங்கிரசு அரசு இப்படி ஒரு அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். ஆறுகோடி தமிழர்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்துவதன் மூலம் ஆளும் காங்கிரசு அரசுதான் உண்மையில் இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் ஊரு விளைவிக்கும் காரியத்தில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தின் ஆட்சியமைப்பின் தலைப்பீடமான சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காலில் போட்டு மிதித்ததின் மூலம் இந்திய கூட்டாட்சி முறையையே கேள்விக்குறியாதாக்கி இருக்கிறது இந்த காங்கிரசு அரசு. இப்படி நாட்டின் இறையாண்மையை முழுதாக குழிதோண்டி புடைத்தவர்கள் ஆளும் காங்கிரசுக்காரர்கள்தான். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசுவர்கள் அல்ல.
ஈழத்தில் இன்று ஏற்பட்டிருக்கின்ற அவலங்களுக்கு காங்கிரசும் அதன் தலைவியும்தான் காரணம் என்கிறீர்களா?
ஆமாம். ஈழத்தில் ஒன்றுமறியா பிஞ்சுக்குழந்தைகளையும் பெண்களையும் வயதானவர்களையும் கொன்று குவிக்கும் ராசபக்சேவின் கூட்டாளி இவர்கள்தான். இருபந்து ஐந்து ஆண்டுகளாக நடக்கும் போரில் விடுதலைபுலிகளின் ம…….. கூட பிடுங்க முடியாத சிங்கள அரசு இந்த அளவுக்கு கொடூரங்களை அச்சமின்றி நிறைவேற்றக்காரணம் இந்தியாவின் தற்போதய ஆதரவுதான். சோனியாகாந்தி தலைமையிலான இந்திய அரசு ஒரு மாபெரும் வரலாற்றுத் தவறை செய்துகொண்டுள்ளது. காலத்தின் முன்னால் அதற்கான பதிலை அவர்கள் கட்டாயம் கொடுக்கு வேண்டியிருக்கும்.
இந்த விடயத்தில் மட்டுமல்ல எல்லா விடயங்களிலும் தனது தவறான வழிநடத்துதல் மூலம் காங்கிரசை பாதாளத்தில் தள்ளிவிட்டார் சோனியா. நூற்றியைம்பது ஆண்டுகள் வரலாற்றை கொண்ட ஒரு கட்சியின் தலைப்பதவியை ஒரு வெளிநாட்டை சேர்ந்தவரிடம் ஒப்படைத்ததின் மூலம் தானே தனக்கு சவக்குழி வெட்டிக்கொண்டுள்ளது அந்த கட்சி. நாட்டுப்பற்றும் நாட்டின் இறையாண்மையை காக்கும் குணமும் ஒருவரின் ரத்தத்தில் இருக்கவேண்டும். இந்தியா எனும் மாபெரும் கூட்டரசை கட்ட நம் தலைவர்கள் செய்த தியாகத்தை பின் வாசல் வழியாக வந்தவர்கள் புரிந்துகொள்ள முடியாது. இன்று சோனியாவின் பின்னால் மக்களின் ஆதரவு பெற்ற ஒரு தலைவராவது உண்டா? நினைத்து பாருங்கள். ராசிய சபா மூலமே பாரளுமன்றத்தில் நுழையும் ஒருவர்தான் பிரதமர். தன் சொந்த மாநிலத்திலேயே கட்சியை தொலைத்துவிட்ட பிரணாப்தான் பாதுகாப்பு அமைச்சர். ஆட்சிக்கு ஒரு கட்சிமாறும் சிதம்பரம் உள்துறை அமைச்சர். இப்படி தொண்டர்களுக்கு வெகு தூரத்தில் இருப்பவர்கள்தான் இவரின் பின்னால் இருப்பவர்கள். அதனால்தான் இவர்கள் அரசும் சாமானிய மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத அவர்களின் உணர்வுகளுக்கு எதிராண அரசாக உள்ளது.
ஆகவே தமிழக மக்கள் இந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசு கட்சியை முற்றிலுமாய் புறக்கணித்து அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இன்றைய நிலையில் ஈழப்பைரச்சினைத்தீர நீங்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் என்ன?
1. சிறீலங்காவில் உடனடி போர்நிறுத்தத்தை இந்தியா ராசபக்சேவுடன் சேர்ந்து அறிவிக்க வேண்டும்.
2. சிறீலங்காவுக்கு இந்தியாவால் வழங்கப்பட்டுள்ள இரானுவ மற்றும் நிதியுதவிகள் திரும்ப பெறவேண்டும்.
3. போரில் காயம்பட்ட அனவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஐநா அமைப்புகள் மூலம் ஏற்பாடு செய்யவேண்டும்
4. தமிழர்கள் பகுதியிலிருந்து சிங்கள இராணுவம் வெளியேற வேண்டும்
5. தமிழர்கள் தங்கியுள்ள இடைத்தங்கல் முகாம்கள் அனைத்தையும் பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும்.
6. தமிழர்கள் பகுதியில் ஐநா கண்காணிப்பில் ஒரு முழு கருத்துக்கணிப்பை நடத்தி அவர்களின் விருப்பமான அரசியல் தீர்வை பெற வழிவகைச் செய்யவேண்டும்.
7. தமிழர்களுக்காக தலைமையை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அவர்களிடத்திலேயே விட்டுவிடவேண்டும்
( முற்றும்)
-------------------------------------------------------------------------------------
உங்களுக்கு இந்தக் கட்டுரை பிடித்திருந்தால் உங்கள் வாக்குகளை கீழே உள்ள தமிழீழ் வாக்கு சேகரிப்பானில் பதிவு செய்யவும். இது மற்றவர்களுக்கும் இக்கட்டுரையை கொண்டு செல்ல உதவும்.
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
உங்கள் தலைப்பை "ஈழம் - கேள்வி பதில்" என்றே வைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
//. சிறீலங்காவில் உடனடி போர்நிறுத்தத்தை இந்தியா ராசபக்சேவுடன் சேர்ந்து அறிவிக்க வேண்டும்.
2. சிறீலங்காவுக்கு இந்தியாவால் வழங்கப்பட்டுள்ள இரானுவ மற்றும் நிதியுதவிகள் திரும்ப பெறவேண்டும்.
3. போரில் காயம்பட்ட அனவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஐநா அமைப்புகள் மூலம் ஏற்பாடு செய்யவேண்டும்
4. தமிழர்கள் பகுதியிலிருந்து சிங்கள இராணுவம் வெளியேற வேண்டும்
5. தமிழர்கள் தங்கியுள்ள இடைத்தங்கல் முகாம்கள் அனைத்தையும் பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும்.
6. தமிழர்கள் பகுதியில் ஐநா கண்காணிப்பில் ஒரு முழு கருத்துக்கணிப்பை நடத்தி அவர்களின் விருப்பமான அரசியல் தீர்வை பெற வழிவகைச் செய்யவேண்டும்.
7. தமிழர்களுக்காக தலைமையை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அவர்களிடத்திலேயே விட்டுவிடவேண்டும்
//
இதுல ஒன்னு கூட நடக்காது,,, காங்கிரஸ் ஆட்சில இருகுரவரை
கருத்துக்கு நன்றி பித்தன்!
அதுக்குத்தான் காங்கிரசை அடிச்சு விரட்டனும்னு நான் சொல்றேன்!
நன்றி தமிழ் நெட் ஒன்!
very good article.
நன்றி அனானி!
என்னத்தச் சொல்ல நண்பா..
Post a Comment