எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Thursday, 19 February 2009

பிராபாகரனை பற்றிப்பேச சிதம்பரத்திற்கு யோக்கியதை உண்டா?

பிரபாகரன் ஒரு பதவி ஆசைப்பிடித்தவர் என்று சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் சிதம்பரம் பேசியிருக்கிறார். கடந்த பல மாதங்களாக தமிழக மக்கள் ஈழத்து சொந்தங்களை காப்பாற்றச் சொல்லி கதறியபோதெல்லாம் காதில் பஞ்சை வைத்து அடைத்துக்கொண்டு ரத்த காட்டேரி ராசபக்சேவுடன் கைகோர்த்து ஆட்டம் போட்ட காங்கிரசு சாத்தான்கள் இன்று வேதம் ஓத வந்திருக்கின்றன். அதுவும் சூழ்ச்சிக்கார மாயாவி கருணாநிதி போட்டுக்கொடுத்த பாதையில். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எதையாவது பிடித்து தொங்கிக்கொண்டு அமைச்சர் பதவியை வாங்கிவிடும் சிதம்பரத்துக்கு பிரபாகரன் அவர்களைப்பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கிறது என்று தெரியவில்லை. இருக்கின்ற ஒரு உடைந்த நாற்காலிக்கே ஒன்பது கோஷ்டிகளாக பிரிந்து சண்டையிடும் காங்கிரசு காரர்களுக்கு கொள்கைக்காக தன் உயிரையே பணயம் வைத்து போராடும் ஒரு தலைவனை பார்த்து பதவி வெறி பிடித்தவன் என்று கூற எந்த தகுதியும் இல்லை. தன் சொந்த இனத்தின் விடுதலைக்காக தன் சொந்த மகனையே களத்தில் இறக்கி போராடுகிறார் பிராபாகரன் அவர்கள். இறையாண்மை தேசியம் என்று ஊரை ஏமாற்றும் காங்கிரசு கோஷ்டிகள் ஒருவராவது தனது வாரிசுகளை இந்திய ரானுவத்திற்கு அனுப்பியிருக்கிறார்களா? அவர் நினைத்திருந்தால் வடகிழக்கு மாகாணத்துக்கு முதல்வராகி இவர்களைப்போன்று கொள்ளையடித்து சுவிசு வங்கியில் போட்டிருக்க முடியும். சிதம்பரத்தை போன்று தன் மகனுக்கு பதினைந்து லட்டர் பேடு கம்பனிகளை வைத்துக்கொடுத்து நாட்டை கொள்ளையடித்திருக்க முடியும். ஆனால் தான் கொண்ட கொள்கைக்காக தன் சுக துக்கங்கள் அனைத்தையும் காவு கொடுத்து போராடும் ஒரு தலைவனை குறைத்துப் பேச தன் சொந்த நலனுக்காக நாட்டையே அடகுவைக்கும் காங்கிரசுக்காரர்களுக்கு எந்த தகுதியும் இல்லை. தன் இனத்துக்காகவே போராடி அவர்களுக்காகவே உயிர்விடத்துணியும் அவர் சர்வாதிகாரியா? தன் மகனை முன்னுக்கு கொண்டுவருவதற்காக தன் சொந்த கட்சியின் ஒரு தன்னலமற்ற தொண்டனை காவு வாங்கிய கருணாநிதி சர்வாதிகாரியா? தடி ஊன்றும் வயதிலும் மனைவி துணைவி அவர்களின் குழந்தைகள் பேரக்குழந்தைகள் என்று தன் குடும்பம் செழிக்க வேண்டும் எனபதற்காகவே பதவி நாற்காலியை பிடித்துக்கொண்டிருக்கும் கருணாநிதி பேராசைக்காரரா? தன் இயக்கம் ஒன்றையே குடும்பமாக கொண்டு போராடும் அவர் பேராசைக்காரரா? தன் வசதிக்கேற்றவாறு வராலாற்றை மாற்றிக்கொள்கிறார் சிதம்பரம். ராசீவ் செயவர்த்தனே ஒப்பந்ததை காலில் போட்டு மிதித்தவர்கள் சிங்களர்களா? அதை பூரணமாக அமுல் படுத்த வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்ட திலீபனின் இனமாகிய விடுதலைப்புலிகளா? கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நடத்தப்பட்ட அகிம்சை போராட்டத்த்தில எந்த முன்னற்றமும் இல்லாததால் ஈழப்போராட்டம் ஆயுத களத்திற்கு தள்ளப்பட்டது. ராசீவ் செயவர்த்தனே ஒப்பந்தத்திற்கு முன்பே அங்கு பல ஒப்பந்தங்கள் போடப்பட்டு அவை அனைத்தும் குப்பை தொட்டியில் வீசப்பட்டன. அவற்றில் கூறப்பட்ட ஒரு சரத்துக்கூட சிங்கள அரசால் செயல்படுத்தப்பட்டதில்லை. அதனால்தான் இந்த ஒப்பந்தமும் எந்த பலனும் தரப்போவதில்லை என்று விடுதலைப்புலிகள் அன்றே ராசீவ் காதில் ஓதினார்கள். ஆனால் அது எதையுமே காதில் வாங்காத ராசீவ் அரசு அந்த ஒப்பந்தத்தை ஏற்கச்சொல்லி விடுதலைப்புலிகளை கட்டாயப்படுத்தினார்கள். இந்தியா கேட்டுக்கொண்ட ஒரே காரணுத்துக்காக அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள் விடுதலைப்புலிகள். ஆனால் ஒப்பந்தம் அமலுக்கு வந்த மறுகணமே அதை மீறி 17 நிராயுதபாணிகளை கைது செய்து ஒப்பந்தத்தை சீரழித்தது சிங்கள அரசு. வழக்கம்போல் இந்தியா இந்த விடயத்திலும் நீதி தவறி நடந்ததால்தான் அமைதிப்படைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே பிரச்சினை ஆரம்பம் ஆனது. உண்மை இப்படி இருக்க ராசீவ் ஒப்பந்தத்தை விடுதலைப்புலிகள் மதித்திருந்தால் ஈழத்தில் பாலும் தேனும் ஓடும் என்று சிதம்பரம் புலுகுவதை யாரும் நம்ப தயாரில்லை. அப்பாவி தமிழ் இனத்தை அழிக்க திட்டமிட்டு ஒரு இன அழிப்பை செய்து வரும் ராசபக்சேவுடன் கூட்டு சேர்ந்து தமிழினத்துக்கு துரோகம் செய்வது மட்டுமில்லாமல் நாகூசாமல் அந்த பழியை விடுதலைப்புலிகளின் மீது போடும் காங்கிரசின் தேர்தல் நாடகத்தை யாரும் நம்பமாட்டார்கள். இறையாண்மையுள்ள நாடு என்ன செய்ய வேண்டும் என்று இந்தியா சொல்லமுடியாது என்று நீட்டி முழங்குகிறார் பிரணாப். அப்படியென்றால் ராசீவ் ஒப்பந்தம் எப்படி போடப்பட்டது. அப்படிப் போடப்பட்ட ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் அப்படி செயல் படுத்தினால் அங்கு பாலாறும் தேனாறும் ஓடும் என்று பசப்புவது எதனால்? இந்தியா தெற்கு ஆசியாவிலே பெரியண்ணன் வேசம் கட்டவேண்டும் அதன் பயனால் தாங்கள் இங்கு கொள்ளை அடித்த பணத்தை அந்நிய முதலீடு என்ற பெயரில் இலங்கையின் தொழில்களை ஆக்கிரமிக்கவேண்டும் இதுதான் காங்கிரசு தலைவர்களின் ஆசை. இதற்காக நம் சொந்தங்களை காவு வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த லட்சனத்தில் இவர்களை செய்வதை மேடை போட்டு நியாயப்படுத்தும் அளவிற்கு இவர்களை தமிழக மக்கள் விட்டு வைத்திருப்பது அதிகம். சு.சாமியை முட்டையால் அடித்த நண்பர்களே நீங்கள் முதலில் அடித்திருக்கவேண்டியது சிதம்பரத்தைதான்!

11 comments:

Ilaya said...

He is fit for only counting notes he always(wants ) to stay in delhi to get a next PM.post or ministry.
He has no rights to talk on tamil issues .
நான் ஆங்கிலத்தில் எழுதியதுக்கு காரணம் சர்ர்க்கு தமிழ் படிக்க தெரியாதுலே அதான்

Anonymous said...

Yes your words are 100% correct, also mention about his speech about "peace talks with an armed rebel group and Govt is not possible" They have(india Govt) talked with Naxalites recently. Are the Naxalites disarmed before peace talks?? P.Chidambaram knows how to make money from his ministry and get growing of his Son. He has no right to talk about Prabhakaran. He is only hero for tamils.

SUBBU said...

//"பிராபாகரனை பற்றிப்பேச சிதம்பரத்திற்கு யோக்கியதை உண்டா?"// நல்லா சொன்னீங்க

Anonymous said...

\\சு.சாமியை முட்டையால் அடித்த நண்பர்களே நீங்கள் முதலில் அடித்திருக்கவேண்டியது சிதம்பரத்தைதான்!\\

yes this is correct point

"உழவன்" "Uzhavan" said...

பின்னிடீங்க.. இந்த ஒரு பதிவே போதும்.. இதுவே சிதம்பரம் மேல ஆயிரம் அழுகிய முட்டையை அடித்ததற்கு சமம். என்ன நான் சொல்றது???

யட்சன்... said...

சிதம்பரத்தை பற்றி பேச உங்களுக்கு எத்தனை அருகதையிருக்கிறதோ அதே அளவு அருகதை பிரபாகரனை பற்றி பேச சிதம்பரத்திற்கு இருக்கிறது என நினைக்கிறேன்.

பிரபாகரனோ, விடுதலைபுலிகளோ விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனித பிம்பம் என்கிற மாதிரியான மாயையிலிருந்து வெளிவர உங்களை மாதிரியானவர்கள் முயற்சிக்கலாமே....

கலைஞரை இத்தனை வாங்கு வாங்கும் நீங்கள் ஒன்றை வசதியாக மறந்து விடுகிறீர்கள்.

இன்றைக்கு நேற்றைக்கு இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவது மாதிரி உணர்ச்சிவயப்படும் நீங்கள் செயலலிதா ஆட்சியில் இருக்கும் போது எதை மூடிக்கொண்டிருந்தீர்கள்....

கலைஞரின் மறைமுகமான அனுசரனையையும், ஆதரவினையும் சரியான முறையில் பயன்படுத்தி தமிழகத்தில் எழுச்சியினை உண்டாக்குவதை விட்டுவிட்டு கலைஞரை கிண்டி கிழங்கெடுக்கும் உங்கள் தமிழுணர்வும், சிதம்பரத்தின் சப்பைகட்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை....

இந்த விசயத்தில் உங்களை மாதிரியான காகிதபுலிகளை விட திருமா எவ்வளவோ மேம்பட்டு நிற்கிறார்....

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
வான்முகிலன் said...

அழுகிய முட்டை என்ன? சாணத்தையே கரைத்து ஊற்றுவதற்கு மக்கள் காத்திருக்கிறார்கள்.
அதைக் காண நீங்கள் காத்திருங்கள்

தமிழ் நாடன் said...

நன்றி இடயா
நன்றி ரெங்கா
நன்றி சுப்பு
நன்றி மனோ
நன்றி உழவன்
நன்றி யட்சன்
நன்றி அனானி

Anonymous said...

டுபுக்குங்களா மக்கள் சேவை செய்யத் தான் சிதம்பரம் கோல்டு மெடல் எடுத்துப் படிச்சாரா? குடும்பத்தை காப்பாத்துராரா? எப்படி நிர்வாகம் பண்ணுறார் பாருங்க?

பன்னாடைங்களா எதுக்கு சும்மா சிவனே என்று இருக்கிற ஐயாவையும். அம்மாவையும் வம்புக்கு இழுக்கிறீங்க. அவங்க ஒண்ணுமே பண்ண மாட்டாங்க. உங்களால என்னத்த கிழிக்க முடியுமோ கிழிச்சுப் பாருங்க..

தமிழ் நாடன் said...

யட்சன்

யாரைப்பற்றியும் யாரும் விமர்சனம் செய்யலாம். ஆனால் விமர்சனம் செய்யப்படும் கருப்பொருள்தான் முக்கியம்.அடுத்தவர்களின் கொள்கைகளையும் வழிமுறைகளையும் விமர்சிக்கலாம். தனி ஈழ கோரிக்கை தவறென்றால் அதை விமர்சிக்கலாம்.ஆனால் தனிப்பட்ட விமர்சனம் என்று வரும்போது அது கட்டாயம் நம்மையும் தாக்கும் என்று அறிய வேண்டும். பிரபாகரனின் பேராசையால் தான் ஈழப்போராட்டம் நீடிக்கிறது அவர் சொல்வதால் அவர் பிரபாகரனை விமர்சிக்கவில்லை ஆனால் அந்த கோரிக்கைக்காக போராடுகிற உயிர்விட்ட தியாகிகளை கேவலப்படுத்துகிறார் என்பதை நீங்கள் அறிய வேண்டும். தனி ஈழ கோரிக்கை தந்தை செல்வா காலத்திலிருந்து முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் அது அர்த்தமற்றது என்று சொல்ல சிதம்பரத்திற்கோ உங்க்ளுக்கோ எனக்கோ அருகதை இல்லை. ஈழ மக்கள்தான் அதை சொல்லவேண்டும். விடுதலைப்புலிகளும் பிரபாகரனும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. விமர்சனம் செய்பவரின் தகுதியையும் விமர்சனம் செய்யப்படும் கருப்பொருளையும் பொருத்தது அது.

செயலலிதா காலத்தில் நாங்கள் மோட்டுவ்ளையை பார்த்து படுத்திருந்தோம் என்று உங்களுக்கு யார் சொன்னது?

உங்களுக்கு மேல் எனக்கும் திருமா மீது மரியாதை உண்டு. ஆனால் அவர் செய்து கொள்ளும் சமரசங்கள் அவரை முன்னெடுக்கும்படியாக இல்லை என்பது என் கருத்து.

உங்கள் கருத்துக்கு நன்றி.