கருணாநிதி நிதியின் கேள்வியும் நானே பதிலும் நானே பாணியில் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்த நமது கேள்வி பதில்கள் இவை. பத்திரிக்கையாளர்களின் எடக்கு மடக்கு கேள்விகளை தவிர்ப்பதற்காகத்தான் அவர் இவ்வாறு செய்வது வழக்கம். ஆனால் நம்மையெல்லாம் மதித்து கேள்வி கேட்க ஆளே இல்லாததால் நாமும் அவரது பாணியை பின்பற்றியுள்ளோம்.
இலங்கை என்பது நமது இந்தியாவுக்கு ஒரு அண்டை நாடு. அண்டை நாட்டு உள்விவகார விடயங்களில் நம் நாடு ஒரு அளவுக்குத்தான் தலையிட முடியும் என்று கருணாநிதி கூறியுள்ளாரே? அது நியாயம்தானே?
இந்த ஞானோதயம் அவருக்கு இப்போது வந்திருப்பதில் எந்த நியாமும் இல்லை. மேலும் இவ்வாறு சொல்லி அவருக்கு உள்ள பொறுப்பை அவர் தட்டி கழிக்கிறார் அல்லது தான் தமிழினத்திற்கு அவர் செய்த துரோகத்தை மறைக்கிறார். இந்தியா ஒரு பொறுப்புள்ள அண்டை நாடாக மட்டும் நடந்து கொண்டிருந்தால் நாம் இந்தியாவை ஈழப்பிரச்சினையில் தலையிடச்சொல்லிக் கேட்பதில் நியாயம் இல்லை. மாறாக இனவெறி ராசபக்சே அரசின் கூட்டாளியாக இந்தியா நடந்துகொள்கிறது. ஈழத்தில் நடக்கும் போரை மறைமுகமாக நடத்துவது இந்தியாதான். எண்ணற்ற ஆயுதங்களையும் பல கோடி ரூபாய் நிதியுதவியையும் நூற்றுக்கணக்கான போர் வீரர்களையும் அனுப்பி போரை வழி நடத்துவதே இந்தியாதான். அதனால்தான் போர் நிறுத்தத்துக்கு இந்தியாவை அழுத்தம் கொடுக்கச்சொல்லி பல உலக நாடுகளும் கேட்கின்றன. அமரிக்காவும் அய்ரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும் தங்கள் அறிக்கைகளில் இந்தியா தலையிட்டு போர் நிறுத்தத்தை கொண்டுவரவேண்டும் என்று கூறியிருக்கின்றன. இதிலிருந்தே இந்த இன அழிப்பு போரில் இந்தியாவின் பங்கு வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. உலகத்துக்கே தெரிந்த இந்த விவரம் கருணாநிதிக்குத் தெரியாதா? நிலைமை இப்படியிருக்க யாரை ஏமாற்ற இந்த நாடகத்தை கருணாநிதி போடுகிறார்? தமிழின அழிப்பில் சோனியாவுக்கு எந்த அளவு பங்கு உள்ளதோ அதே அளவு பங்கு அவர்களுக்கு பல்லக்கு தூக்கிய கருணாநிதிக்கும் ராமதாசுக்கும் உள்ளது. தமிழின வரலாற்றில் இதற்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
ஈழத்தில் நடப்பது ஒரு பயங்கர வாதத்திற்கு எதிரான போர் என்று சிறீலங்கா கூறுகிறது. அந்த வகையில் ஒரு நட்பு நாட்டுக்கு இன்னொரு நட்பு நாடு உதவுவது முறைதானே?
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று சொல்லி உண்மையில் ராசபக்சே அரசு ஒரு அப்பட்டமான இன அழிப்பை நடாத்தி வருகிறது. இது இந்தியா உட்பட எல்லா நாடுகளுக்கும் தெரியும். அது தெரிந்தேதான் இந்தியா அவர்களுக்கு உதவுகிறது. முதலில் உண்மையான பயங்கரவாதிகள் யார் என்பதை சர்வதேச சமூகம் உணர வேண்டும். தன் சொந்த இனத்தை காப்பாற்றுவதற்காக ஆயுதமேந்தி போராடும் போராளிகள் பயங்கரவாதிகளா அல்லது தன் சொந்த நாட்டு மக்களையே ரசாயன குண்டுகளை பொழிந்து கொல்லும் சிங்கள அரசு பயங்கரவாத அரசா? புலிகள் பயங்கரவாதிகள் என்றால் இந்திய அரசு அவர்களுக்கு ஏன் ஆயுத பயிற்சிகள் வழங்க வேண்டும். சமீபத்தில் கூட ஈழத்திலிருந்து வந்த பாடகி மாயா பேட்டியில் ஒரு கருத்தை சொன்னார். உண்மையில் போராளிகளை மட்டும் கொல்வதென்றால் அனைத்து வல்லமை பொருந்திய ஒரு நாட்டுக்கு இவ்வளவு நாட்கள் தேவையேயில்லை. ஆனால் போராளிகளை கொல்கிறோம் என்ற போர்வையில் ஒரு இனத்தை பூண்டோடு அழிக்கவே சிறீலங்கா அரசு திட்டமிட்டு சதிராடுகிறார்கள் என்றார். அதுதான் அப்பட்டமான உண்மை. விடுதலைப்புலிகள் வெறும் பயங்கரவாத இயக்கம் அல்ல. அது ஒரு மக்கள் ஆதரவு பெற்ற போராளி இயக்கம். மக்களோடு மக்களாக இணைந்த இயக்கம். அவர்களின் போராட்டத்தில் நேர்மையில்லை எனில் 30 வருடங்களாக மக்கள் ஆதரவோடு ஒரு மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து செல்ல முடியாது. இன்றைய நிலையில் பயங்கரவாதம் என்ற சொல்லின் பயன்பாடே விவாதத்திற்கு உரியதாக உள்ளது. சிறுபான்மை மக்களை ஒடுக்குவதற்கு பெரும்பாண்மை இன ஆதிக்க சக்திகள் பயங்கரவாதம் என்ற பதத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றன என்பதுதான் கசப்பான உண்மை. நேற்று நேதாசியும் சேகுவாராவும் பிடல் காசுபரோவும் பயங்கரவாதிகளாக ஆதிக்க சக்திகளால் அடயாளம் காட்டப்பட்டார்கள். ஆனால் அவர்கள் மக்களால் மாவீரர்களாக கதாநாயகர்களாக ஆக்கப்பட்டார்கள். நேற்று பயங்கரவாதிகளாகவும் ஆயுதப்போராளிகளாகவும் அடையாளம் காணப்பட்ட மாவோயிசுடுகள்தான் இன்று நேபாளத்தில் ஆட்சியை அமைத்திருக்கிறார்கள். இதுதான் நாளைக்கும் நடக்கும்.
சிறீலங்கா என்பது ஏற்கனவே சின்னஞ்சிறிய நாடு. அதைப்பிரித்து இன்னொரு நாட்டை உருவாக்குவது எப்படி நியாயமாகும்?
இது மிகவும் குழந்தைத்தனமான வாதம். நாடு பெரியது என்றால் கேட்பவர்க்கெல்லாம் பிரித்து கொடுத்துவிடலாமா என்ன? இங்கு பிரச்சினை நாட்டின் விசாலம் குறித்தது அல்ல. பிரச்சினையே அதை ஆள்பவர்களின் மனதின் விசாலம் குறித்துதான். உண்மையில் ஆங்கிலேயர்கள் ஆள்வதற்கு முன் சிறீலங்கா மூன்று சிறு நாடுகளாகத்தான் இருந்தது. ஒன்றை சிங்களவர்களும் மற்றொன்றை பழங்குடியினரும் வடநாட்டை தமிழ் பூர்வக்குடிகளும் ஆண்டார்கள். ஆனால் ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக அவற்றை இணைத்து ஒரே நாடாக ஆண்டார்கள். ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டுச் செல்லும்போது மொத்தமாக சிங்களவர்களிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டார்கள். அப்போதும் கூட பிரச்சினை எழவில்லை. ஆனால் ஆங்கிலேயர் காலத்தில் கொடுக்கப்பட்ட சம உரிமை கூட சிங்களர் ஆட்சியில் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டதால்தான் தமிழர்கள் தனிநாடு கேட்கும் நிலைக்கு வந்தார்கள். தங்களின் ஆதிக்க வெறியால் தமிழர்கள் தனிநாடு கேட்கவில்லை. தங்கள் குறைந்தபட்ச வாழவுரிமையை பாதுகாத்துக்கொள்ளவே தமிழர்கள் தனிநாடு கேட்கிறார்கள். சிங்கப்பூர் ஒரு நாடு கூட அல்ல ஒரு சிறிய நகரம். அவர்கள் தனியான நாடாகி சிறந்து விளங்கவில்லையா? கிழக்கு திமோர் இந்தோனேசியாவில் இருந்து பிரிந்து தனியான நாடாகவில்லையா? சின்னஞ்சிறிய கோசாவா தனி நாடாகவில்லையா? நாடு சிறியதென்றால் ஒரு நீண்ட வரலாறு கொண்ட ஒரு இனம் அடிமையாக இரண்டாம்தர குடிமக்களாகத்தான் வாழவேண்டுமா?
இந்தியாவில் கூடத்தான் காசுமீரிலும் நாகாலாந்திலும் போராளிகள் தனி நாடு கேட்கிறார்கள். சிறீலங்காவில் தமிழர்களுக்கு தனி நாடு கொடுப்பது நியாமென்றால் இவர்களின் கோரிக்கையும் நியாமானதுதானே?
மேலோட்டமாகப் பார்த்தால் இந்த கேள்வியில் நியாம் இருப்பதாக தோன்றும். இந்த கருத்தை சொல்லித்தான் பல அறிவு சீவிகள் நம்மை ஏமாற்றப் பார்க்கிறார்கள். ஆனால் அடிப்படையில் தனி ஈழக் கோரிக்கையை இந்தியாவில் எழுப்படும் தனி நாடு கோரிக்கைகளுடன் ஒப்பிடுவது முட்டாள்தனமானது. ஏனெனில் இந்தியாவின் அரசியல் அமைப்புச்சட்டமும் அதனால் நமக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளும் ஒவ்வொரு இந்திய குடிம்க்களுக்கும் சமமானது. இந்தியாவின் எந்த ஒரு குடிமகனும் இந்தியாவின் பிரதமராக ஆகமுடியும். எல்லா பெரும்பான்மை மொழிகளும் ஆட்சி மொழிகளாக உள்ளன. இந்திய அரசு எந்த மதத்தையும் சாராதது. ஆனால் சிறீலங்காவின் அரசியலைப்புப் சட்டப்படி தமிழன் குடியரசு தலைவராகவோ அல்லது பிரதம மந்திரியாகவோ ஆகவே முடியாது. தமிழர்கள் சிறீலங்காவின் அரசியலைப்புச்சட்டப்படி இரண்டாம் தர குடிமக்களாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். சிங்களர்களின் மதமான பவுத்தம்தான் அரசின் மதம். இந்தியாவில் ஒவ்வொரு இனத்தவரும் அவரவர் பகுதிகளில் சுதந்திரமாக அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடகிழக்குப்பகுதியில் அவர்களின் பெரும்பானமை குறைக்கும் பொருட்டு வலுக்கட்டாய சிங்கள குடியேற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றான. இப்படி தமிழர்களுக்கு எதிராக சிறீலங்கா இனவெறி அரசு செய்யும் ஏராளமான கொடுமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். எல்லா விதத்திலும் ஈழத்தமிழர்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே இரண்டாம் தர குடிமக்களாக அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். அதை எதிர்த்துதான் அவர்கள் தனிநாடு கேட்கிறார்கள். காசுமீரிலும் நாகலாந்திலும் மக்களுக்கு என்ன உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன என்பதை இந்த கேள்வியை கேட்பவர்கள் சிந்தித்து பார்க்கவேண்டும்.
தமிழர்களுக்கு சம உரிமை மறுக்கப்பட்டால் அந்த உரிமைகளை திரும்ப கேட்பதுதானே நியாயம். தனி நாடு கேட்பதேன்?
ஆரம்பத்தில் தமிழர்கள் ஒரு அரசியலமைப்பாக தந்தை செல்வா அவர்களின் தலைமையில் சம உரிமைக்காக பல அறவழிப்போராட்டங்களை முன்னெடுத்தனர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தமிழர்களுக்கான அறவழிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் சிங்கள அரசுகளோ இத்தகைய அறப்போராட்டங்களை ஆயுத பலத்தினால் அடக்கியது. எதிர்த்த தமிழர்கள் பல விதங்களிலும் இன்னலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். பல சிங்கள ஆட்சியாளர்கள் பெயரளவில் தமிழர்களுடன் பல ஒப்பந்தங்களைப்போட்டு அவ்வப்போது நிலைமையை சரி கட்டினார்கள். ஆனால் இவ்விதமான ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்ட ஒரு சரத்துக்கூட இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்வில்லை. மாறாக மறைமுகமாக தமிழர்களின் போராட்டங்களை நீர்த்துப்போக செய்யும் வேலைகளில் இந்த அரசுகள் ஈடுபட்டன. தமிழ் தலைவர்களில் எட்டப்பன்களை தேர்ந்தெடுத்து அவர்களை நல்ல தலைவர்களுக்கு எதிராக ஏவுவது மற்றும் வலுக்கட்டாய சிங்கள குடியேற்றங்களை தமிழர் பகுதிகளில் உருவாக்கி அதன் மூலம் தமிழர் பகுதிகளில் அவர்களின் ஆளுமைகளை குறைக்கும் வேலைகள் போன்றவற்றில் இறங்கின. சுயாட்சி அதிகாரம் அதிகார பரவல் பெடரல் முறை என்று பல அரசியல் தீர்வுகளை தந்தை செல்வா முன்வைத்து பார்த்தார். சிங்களர்கள் இதில் எதையும் ஏற்பதாக இல்லை. பொறுத்து பொறுத்துப்பார்த்த தந்தை செல்வா இறுதியாக தனி ஈழம்தான் சிறீலங்கா பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்ற முடிவுக்கு வந்தார். இப்படித்தான் தனி ஈழ கோரிக்கை உருவானது. தனி ஈழம் கேட்டுப் அறவழியில் போராடிய தமிழர்களை சிங்கள இனவெறி அரசுகள் வன்முறையால் அடக்க ஆரம்பித்தன. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். பெண்களும் சிறுமிகளும் பாலியல் வல்லுறவுகளுக்கு ஆளாக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட தமிழர்கள் வேறுவழியின்றி ஆயுதம் ஏந்தி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆகவே தனி ஈழம் கேட்கும் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டதிற்கு சிங்களர்களின் இனவெறியே காரணம். மேலும் தனி ஈழம் என்பது விடுதலைப்புலிகளால்தான் முன் வைக்கப்படுகின்றது என்ற வாதமும் அரசியல் தீர்வுகளை தமிழர்கள் முன்வைக்கவில்லை என்ற வாதமும் முற்றிலும் பொய் என்பதை நாம் உணர வேண்டும்.
(கேள்வி பதில் தொடரும்)
------------------------------------------------------------------------------------
உங்களுக்கு இந்தக் கட்டுரை பிடித்திருந்தால் உங்கள் வாக்குகளை கீழே உள்ள தமிழீழ் வாக்கு சேகரிப்பானில் பதிவு செய்யவும். இது மற்றவர்களுக்கும் இக்கட்டுரையை கொண்டு செல்ல உதவும்.
4 comments:
well done.keep it up.
நன்றி லட்சுமணன் வேலவன்!
nanbene.......un nal nooketin siru tuli,himeyemalaiyaghe oonggi nirkum endru nambugiren.nan endrum un pakkem.manitheruku appar padde oru sakti irupethei awerghel marenthu koduremaghe aadumpothu,mudruppulli nicceyem undu.nanbene un sevei ongge,ni valge.
indonesia oru aleghiyenadu.nanberghele........india podrum ramayanem indonesiawilthan nadenthethu teriyuma?maha barethem indonesiawil nadenthethu teriyuma?hinduwin arembeme indonesia endru teriyuma?siwemalei irupethum indonesia endru teriyuma?itherkellam sandrugel undu,terinthukolle virumbinal...nan viverikke tayarrr.itherku comments pls...........
Post a Comment